பொதுவாக நண்பர்களுடனும் உறவினர்களுடனும் கார்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்பது ஜாலியான ஒன்றாக பலருக்கு உள்ளது.அப்பொழுது அடிக்கடி அனைவர் மனதிலும் டயர்களில் உள்ள அளவு குறியீடுகளைப் பற்றியும் தனது வண்டிக்கு எந்தமாதிரியான டயர் சிறப்பாக இருக்கும் என்பதுபற்றியும் சந்தேகங்கள் எழுந்தவண்ணம் இருந்தது.
டயர்களின் size பற்றிய சந்தேகமும் பெரிதாக இருந்தது. இதில் ஒரு பிரச்சினை டயர் டீலரிடமிருந்தோ மெக்கானிக்கிடமிருந்தோ சரியான பதில் கிடைப்பதில்லை என்பது. அவர்கள் சாதாரண விவசாயிகளுக்கெல்லாம் இவற்றைச் சொல்லவேண்டியதில்லை என எண்ணுகிறார்கள் போலும்.
எனக்கும் இந்தவிவரங்கள் சரியாகத் தெரியவில்லை ,ஆகவே இணையத்தில் தேடியபோது சில விவரங்கள் கிடைத்தன அவற்றை உங்களுடன் பகிர்கிறேன்.

மேற்காணும் படத்திலிருந்து முதலில்
P 215/65R 15 89H
எனும் குறியீட்டைப்பார்க்கலாம் இதில்
- P - என்பது மக்கள் பயணம்செய்யும் வண்டிக்கு என்பதைக்குறிக்கும்
- 215 - டயரின் அகலம் மிமீ ல்
- 65 - என்பது டயரின் உயரம் அகலத்தின் விகிதத்தில்,அதாவது 215 மிமீ ல் 65 சதம் அதாவது 139.75 மிமீ
- R - ரேடியல்டையர் என்பதைக்குறிக்கும்
- 15 - ரிம்மினுடைய அளவு
- 89 - ஏற்றக்கூடிய அதிகபச்ச எடையைக்குறிப்பது(எடைக்குறியீட்டு எண் )
- H - டயர் தாங்கக்கூடிய அதிகபச்ச வேகத்தைக்குறிப்பது (வேகக்குறியீடு )
கீழ்காணும் பட்டியல், வேகக்குறிறியீட்டின் அடிப்படையில் ஒரு டயர் தாங்கும் வேகம் குறிப்பிடப்பட்டுள்ளது