our inspiration

Showing posts with label விவசாயக் குறிப்புகள். Show all posts
Showing posts with label விவசாயக் குறிப்புகள். Show all posts

Sunday, November 8, 2015

இயற்கை வேளாண்முறையில் களைக்கட்டுப்பாடு

Abutilon indicum

பொதுவாக களைகள் என்பது நமது சாகுபடிப் பயிர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்வதாகும். சூரியவெப்பம், தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் என்று சம அளவில் எடுத்துக் கொண்டு வளர்வதால் பயிர்களின் விளைச்சலில் தொய்வும், காலதாமதமும் ஏற்படுகிறது

 வேளாண் பொருள் உற்பத்தியின் மொத்த வருட இழப்பில், களைகளால் 45 சதவீதமும், பூச்சிகளால் 30 சதவீதமும், நோயினால் 20 சதவீதமும், மற்ற பூச்சிகளால் 5 சதவீதமும் இழப்பு ஏற்படுகிறது.

களைகளை முழுமையாக அழிப்பதற்க்குச் சாத்தியக் கூறுகள் இல்லை என்ற போதிலும் அதைக் கட்டுப்படுத்துவது சாத்தியம்.

இனி களைகளைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பார்ப்போம்

இரசாயன களைக்கொல்லியும், பூச்சிக் கொல்லியும் நமது சுற்றுச்சூழலை பாதிப்பதோடு, குடிநீர் மற்றும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்குகிறது. ஆகவே நமது சந்ததிகள் உயிர் வாழவும், வளங்களை பாதுகாக்கவும் நஞ்சில்லா முறைகளை நாம் கையாள வேண்டும்.


மாட்டுச் சிறுநீரைக் களைக் கொல்லியாகப் பயன்படுத்தல்

இந்த முறையானது பயிர்கள் மீது படாமல் மற்றும் தண்ணீர் (மாட்டுச் சிறுநீரில் )ஏதும் கலக்காமலும் தொடர்ச்சியாக மூன்று முறைகள் களைகள் மீது நன்கு நனையும் படி தெளித்தல் வேண்டும். தன்மூலம் களைகள் மக்கி மண்ணிற்குச் சிறந்த உரமாகவும் மண்ணின் வளம் மேம்படும் என்பது கூடுதல் சிறப்பு. மாட்டுச் சிறுநீருடன் தேவைக்கேற்ப எலுமிச்சம் பழம் டேங்கிற்கு ( 1/2 முதல் 1 பழம் வரையும்) பயன்படுத்திப் பலன் பெறலாம்.

 நிலத்தில் ஈரம் இல்லாதபொழுது மாட்டுச் சிறுநீரைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் பாய்த்த பின்போ அல்லது மழைக் காலத்திலோ  பயன்படுத்துதல் கூடாது. ஏனெனில், மாட்டுச் சிறுநீரில் தழைச்சத்து மிகுந்து காணப்படுகிறது. அவ்வாறு, ஈரம் இருக்கும் பொழுது பயன்படுத்தினால் களைகள் நன்கு செழிப்புடன் வளர்ந்துவிடும்.

உப்பு 

சமயலில் பயன்படுத்தப்படும் உப்பையும் நாம் களைக் கொல்லியாகப் பயன்படுத்தி பயனடைய முடியும். ஒரு பங்கு உப்பிற்கு எட்டு பங்கு தண்ணீர் கலந்து களைகளின் மேல் தெளிக்கலாம் ( வலுவான கலவைக்கு – ஒரு பங்கு உப்பிற்கு மூன்று பங்கு தண்ணீர் சேர்க்கலாம்) இதனுடன் ஒட்டும் திரவமாக காதி சோப் கரைசலைப் பயன்படுத்த வேண்டும்.

 உப்புக் கரைசல் என்பது மண்ணிற்கு ஆபத்தானது. இது களைகளின் மீது மட்டுமே படுவது போன்று தெளிக்க வேண்டும். அதிகமாகப் பயன்படுத்தினால் மண்ணின் கார அமில நிலை மாற வாய்ப்புள்ளது.

Wednesday, November 24, 2010

கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய

தேவையான பொருட்கள் :-
சீரகம் - 15 கிராம்
கடுகு - 10 கிராம்
மிளகு - 5
மஞ்சள் தூள் - 65 கிராம்
பூண்டு - 5 பல் 
தும்பை இலை - ஒரு கைப்பிடி 
வேப்பிலை  - ஒரு கைப்பிடி 
வாழைத்தண்டு - 100 கிராம்
பாகற்காய் - 50 கிராம்
பனைவெல்லம் - 150 கிராம்

செய்முறை :-
சீரகம் , மிளகுகடுகு ஆகியவற்றை இடித்துஅத்துடன் மற்றவற்றை சேர்த்து அரைத்துசிறுசிறு உருண்டைகளாக உருட்டிநூறு கிராம் கல் உப்பில் புரட்டி எடுத்துநாக்கின் மேல் பகுதியில் வைத்தால் மாடு அதை விழுங்கி விடும்மொத்த உருண்டைகளும் ஒரு மாட்டுக்கானதுஒரே நேரத்தில் கொடுக்கப்படவேண்டும்.

அரப்பு மோர் கரைசல் இயற்கையாக ஜிப்ராலிக் ஆசிட்.

அரப்பு இலைத்தூள் ஒரு லிட்டர் படியில் அளந்து எடுத்துக்கொள்ளவும்இத்துடன் ஒரு லிட்டர் இளநீர்ஐந்து லிட்டர் புளித்த மோர் ஊற்றி கலக்கவேண்டும்இந்த கரைசலை பானையில் ஒரு வாரம் வைத்திருக்க வேண்டும்பிறகு பத்து லிட்டர் நீரில் இருநூறு மில்லி அரப்பு மோர் கரைசலை கலந்து வயலில் தெளிக்கலாம்இதனால் நல்லா மகசூல் கிடைக்கும்.  ஜிப்ராலிக் ஆசிட் மற்றும் பிராந்தி செலவு ஆயிரம் என்றால் இந்த கரைசலை தயாரிக்க ஐம்பது ரூபாய் போதும்.

தென்னை வாடல்,வைரஸ் நோய்களுக்கு சர்வரோகநிவாரணி

 1 எருக்கந்தழை-2kg
 2 பொன்னரளி கொட்டை-1kg 
3 நீல நொச்சி-ஒரு கைப்பிடி
 4 ஆடாதோடா-1kg
 5 சிரியா நங்கை-ஒரு கைப்பிடி 
6 கொட்டை தழை-1kg 
7 முயல்காது கள்ளி-1kg 
8 குமுட்டிக்காய்-200gm
 10 எட்டிக்காய்-200gm 
11 பாலைத்தழை-1kg 
12 இஞ்சி-250gm 
13 வசம்பு-200gm 
14 வில்வக்காய்-3 எண்ணிக்கை 
15 மஞ்சள் விரளி-200gm 

இவற்றை நன்றாக பசைபோல் அறைத்து 100 Lit தண்ணீரில் கரைத்து வடிகட்டி அப்படியே அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாம்,இக்கரைசல் பூச்சி,மற்றும் பூஞ்சான நோய்களைக் கட்டுப்படுத்தும்

 தென்னையில் வரும் வாடல் நோய்களைக் கட்டுப்படுத்த, மேற்கண்ட அனைத்துப்பொருட்களையும் ஓரளவு பொடிசெய்து ஒரு மண்பானையில் போட்டு அக்கலவை மூழ்கும்வறை தண்ணீர் ஊற்றி 3 முறை நன்கு பொங்குமளவு கொதிக்கவிட்டு சுமார் 12 மணி நேரம் அடுப்புசூட்டில் வைத்திருந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்,ஒரு மரத்துக்கு இக்கரைசலில் 10 மி.லி யை, தண்ணீர் 10மி.லி யுடன் கலந்து,15 நாள் இடைவெளியில் வேர்மூலம் செலுத்தி வந்தால் ,அனைத்து வித வாடல் நோய்களையும் கட்டுப்படுத்தலாம்

இயற்கைமுறைக் கத்தரி சாகுபடி





சாகுபடிக்கு முதலில் தேவைப்படுவது நாற்றங்கால். இதன் பரப்பு 25 அடிநீளம், 4 அடிஅகலம், 4 அங்குலம் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். நாற்றங்காலுக்கு 500 கிலோநன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும். இதோடு இயற்கை உரங்களானஅசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இவைகளை ஒரு கிலோ வீதம்போடவேண்டும். காய்கறி செடிகளில் தோன்றும் மிகக்கொடிய வாடல் நோயினைக்கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி என்னும் இயற்கை சம்மந்தப்பட்ட பூசணக்கொல்லி ஒரு கிலோ அளவினை நாற்றங் காலுக்கு இட்டு மண்ணினை நன்கு கொத்திவிடவேண்டும். ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை விதைக்க வேண்டும். நாற்றங்காலைத்தொடர்ந்து நடவு வயல் தயாரிப்பதற்கு நல்ல கவனம் தரவேண்டும்.

நடவு வயலில் நல்ல வடிகால் வசதி உண்டாவதற்காக உளி கலப்பை கொண்டுஉழவேண்டும். பிறகு நன்கு மக்கிய தொழு உரம் 10 டன் போட்டு நிலத்தை உழுது பார்சால்போடவேண்டும். (2.5x 2 அடி) நாற்றங்காலில் இருந்து நல்ல திடமான 28 நாள் வயதுடையநாற்றினை எடுத்து நடவு வயலில் நடவேண்டும். (பாருக்கு பார் இரண்டரை அடி, செடிக்குசெடி 2 அடி).

 நடவு நட்ட 20, 40, 60, 80 ஆகிய நாட்களில் ஒவ்வொரு முறையும் ஒரு டன் மக்கிய தொழுஉரம், ஒரு கிலோ பாஸ்போபேக்டீரியா, ஒரு கிலோ டிரைகோடெர்மா விரிடி இவைகளைக்கலந்து வயலில் இட்டு பாசனம் செய்ய வேண்டும். செடிகளுக்கு கவனமாக பயிர் பாதுகாப்புசெய்ய வேண்டும.

நடவு நட்ட மூன்று வாரம் கழித்து மாதம் இருமுறை உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகளானபவேரியா, பாசியானாவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி அளவு கலந்துதெளிக்க வேண்டும். இந்த மருந்தானது செடிகளைத் தாக்கும் காய்ப்புழுக்களுக்குவியாதியை உண்டாக்கி கடுவிரைவில் அவைகளை மடியச் செய்துவிடுகின்றது. இதைத்தொடர்ந்து இலைகளுக்கும் தண்டுகளுக்கும் பூக்களுக்கும் ஏற்படும் பூச்சிகளின்சேதத்தைத் தவிர்க்க வாரம் ஒரு முறை பைட்டோபிராட் என்னும் இயற்கை பூச்சிவிரட்டியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி அளவு கலந்து தெளிக்கவும். இந்த இரண்டுஇயற்கை மருந்துகளும் வெகு சிறப்பாக செயல்பட்டு விவசாயிகள் விஷ மருந்துகளைஉபயோகிப்பதிலிருந்து காப்பாற்றுகின்றன.

வளரும் செடிகளுக்கு காலத்தில் பாசனம் செய்ய வேண்டும். இயற்கை முறையைஅனுசரிக்கும்போது பாசன செலவில் மிச்சம் ஏற்படும். பாசன நீர் கிரகிக்கப்பட்டு பூமிஉலர்ந்தவுடன் ஆட்களை வைத்து கத்தரி செடிகளைசுற்றி பூமியைத் தளர கொத்திவிடவேண்டும். உடனே மக்கிய தொழு உரத்தை பூமிக்கு இட்டு பாசனம் செய்யலாம்.விவசாயிகள் தாங்கள் சேகரித்துள்ள தொழு உரத்தை அவ்வப்போது மேலே விவரித்தபடிசெடிகளுக்கு இட்டுவர வேண்டும். இதனால் செடிகள் செழிப்பாக வளர்ந்து வருகின்றன.மேற்கண்ட பணிகளை கவனத்தோடும் நம்பிக்கையோடும் செய்யும்போது கத்தரி செடிகள்நட்ட 75வது நாளிலிருந்து 120 நாட்கள் வரை அறுவடை கொடுத்துக் கொண்டிருக்கும். ஒருஏக்கரில் 65 கிலோ கொண்ட மூடை 135 கிடைக்கும்.

இயற்கை முறை சாகுபடியில் ஏக்கருக்கு ஆகும் செலவு ரூ.22 ஆயிரம் ஆகும். காய்கள்விற்பனையில் வரவு ரூ.68 ஆயிரம் கிடைக்கும். சாகுபடி செலவு போக ஏக்கரில் நிகரலபாம் ரூ.46 ஆயிரம் கிடைக்கும். ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து அடிக்கும் சாகுபடிமுறையில் சாகுபடி செலவு அதிகரித்துக்கொண்டே வரும். ஆனால் கத்தரி மகசூல்அதிகரிக்காது. இயற்கை முறை சாகுபடி தொடர்ந்து செய்யும்போது சாகுபடி செலவுபடிப்படியாக குறைந்துவிடும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்கும். இதனால் சாகுபடியில்லாபம் கூடுதலாகக் கிடைக்கும். இனி எதிர்காலத்தில் நீண்டகால சாகுபடிக்கு இயற்கைமுறை சாகுபடிதான் ஏற்றது. அந்த இயற்கை முறை சாகுபடிக்கு சக்தியைக் கொடுப்பதுநுண்ணுயிர்களும் உயிர் உரங்களும் ஆகும்.

திருந்திய நெல் சாகுபடி (ஒற்றை நாற்று முறை)

 திருந்திய நெல் சாகுபடி (ஒற்றை நாற்று முறை)

குறைந்த இடுபொருள் செலவில் அதிக நெல் உற்பத்தி செய்வதன் மூலம் சாகுபடியை ஒரு இலாபகரமான வேளாண் தொழிலாக்க முடியும்அதோடு நஞ்சுகளையும் ரசாயனஉரங்களையும் தவிர்பதன் மூலம் நஞ்சில்லா உணவையும் பெற முடியும், அத்தைகையதொரு தொழில் நுட்பம்தான் “தீவிர நெல் சாகுபடி” என்ற ஒருங்கிணைந்த நெற்பயிர் நிர்வாகம்.

ஒருங்கிணைந்த  நெற்பயிர் நிர்வாகத்தின் அம்சங்கள்

  • குறைந்த இடுபொருள் செலவு
  • 15 நாட்கள் வயதுடைய நாற்றுக்கள்
  • குத்துக்கு ஒரு நாற்று
  • அதிக இடைவெளி விட்டு சதுர நடவு முறை (25 x 25 செ.மீ.)
  • களைக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களைத் தவிர்த்தல்
  • நஞ்சை நிலத்திற்குரிய சுழல் கூம்பு வடிவ களை எடுக்கும் கருவி (கோனோ வீடர்மூலம் களைகளை அமுக்கி சேற்றை கலக்கி விடுதல்.
  • நீர் மறைய நீர் கட்டி நீரின் அளவை குறைத்தல்
  • அங்கக கழிவுகளை உபயோகித்து பச்சை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து நிர்வகித்தல்




                                                      பாய் நாற்றங்கால்

நாற்றுகள் தயார் செய்தல்

  • 15 நாட்களில் வாளிப்பான நாற்றுகளை பெற திருந்தியமைக்கப்பட்ட பாய் நாற்றங்கால் முறையை பயன்படுத்தப்படவேண்டும்.
  • நாற்றங்காலை வடிகால் வசதியுடன் நீர் ஆதாரத்திற்கு அருகாமையில் தேர்ந்தெடுக்கவும்.
  • ஒரு எக்டர் நடவு செய்யத் தேவையான நாற்றங்கால் பரப்பு 100 சதுர மீட்டர் (2.5 சென்ட்)




  • ஒரு மீட்டர் அகலமும், 100 மீட்டர் வரை நீளமும், 5 செ.மீ.  உயரமும்கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைக்கவும்.
  • பாத்திகளின் மேல் 300 காஜ் கனமுள்ள வெள்ளை/கருப்பு பாலித்தீன் விரிப்பு விரிக்கவும்.


  • வளமான  வயல் மண்ணுடன் நன்கு பொடியாக்கிய  தொழு உரத்தைச் சேர்த்து அதன்மேல் 4 செ.மீ  அளவிற்கு நிரப்பவும்
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவுடன் விதை நேர்த்தி செய்யப்பட்ட  5 கிலோ முளைக்கட்டிய  விதையை ( எக்டர் நடவு செய்யவிதைத்து பின் மண்ணால் நன்கு மூடிவிடவேண்டும்.


  • அதன்மேல் சுமார் 4இஞ்ச் அளவு அதே ரகநெல்லின் வைக்கோல் போட்டு மூடிவிடவேண்யடும்
  • நாட்கள் வரை பூவாளியில் தண்ணீர் தெளித்து பின் பாத்தி நனையும் வகையில் வாய்க்காலில் தண்ணீர் கட்டவும்.வைக்கோலையும் எடுத்து விடவேண்டும்
  • விதைத்த 9ம் நாள் 3சதம் பஞ்சகாவிய கரைசலை பூவாளி மூலம் மாலையில் தெளிக்கவும்.
  • 14ம் நாள் 12 முதல் 16 செ.மீஉயரமுள்ள  நாற்றுக்களை மெதுவாக அசைத்து பிரித்து எடுத்து நடவு வயலுக்கு கொண்டு போகலாம்.  அங்கு ஒற்றை நாற்றுக்களை வேர் அறுபடாமல் எளிதில் பிரித்து நடவு செய்யலாம்.



தக்கைப்பூடு


சேற்றில்அமிழ்த்தப்பட்ட தக்கைப்பூடு

நடவு செய்தல்

உழவுக்கு,மாட்டு ஏர் மற்றும் பவர்டில்ல்ர் ஏற்றது

  • வயலில் பசுந்தாள் உரப்பயிர்களைப் (கொழிஞ்சி,தக்கைப்பூடு,சணப்பை)      பயிரிட்டு அவற்றைப் பூக்கும் பருவத்தில் மடக்கி உழுது சேறுகலக்கவேண்டும்
  • குறுவை மற்றும் சம்பா பருவத்தில் எக்டருக்கு 12.5 டன் மக்கிய குப்பை அல்லது தொழு உரத்தை இட்டு நன்கு உழவு செய்யவும்.
பின் நிலத்தை நன்கு சமன் செய்யவும்

நடவு இடைவெளி

14 நாள் வயதுடைய  நாற்றுக்களை குத்துக்கு ஒரு நாற்றாக வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 25 செ.மீஇடைவெளியில் சதுர முறையில் நடவு செய்யவேண்டும்.



கோனோ வீடர் கருவி மூலம் களைக் கட்டுப்பாடு

நடவு செய்த 15ம் நாள் முதல் 3 அல்லது 4 முறை கோனோ வீடர் கருவி மூலம் வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்குச் செடி உள்ள இடைவெளியில் இடை உழவு செய்து களைகளை சேற்றில் அமுக்கிவிடவேண்டும்.  கருவியில் மாட்டாத களைகளை கையால் எடுத்து விடலாம்.  இக்கருவி மூலம் ஒரு எக்டர் வயலில் இருபுறம் இயக்க 6-8 கூலி ஆட்கள் தேவைப்படுகிறது.



வயலில்அசோலா இடல்

வயலில் அசோலா எனும் பெரணிவகைத் தாவரத்தை இடும்பொழுது  அது கூட்டுவாழ்க்கைமுறை மூலம் நெற்பயிருக்குத் தேவையான தழைச்சத்தினைக் கொடுத்து,சேற்றுவயலிலிருந்து வெளியேரும் வாயுக்களையும் உறிஞ்சிக்கொள்கிறது அதன்மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் தடுக்கிறது.


நெல்வயலில் அசோலா


மேலுரமிடல்

நட்ட 15-ம் நாள் கோனோ வீடர் மூலம் இடை உழவு செய்த பின் முதல் மேலுரமாக நன்கு மட்கிய மாட்டுச்சானம் அல்லது தொழு உரம்  இடலாம்.  பின்னர் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை தேவைப்பட்டால் எக்டருக்கு  500லிட்டர் அளவில் ஜீவாமிர்தக்க்ரைசல் இடலாம்.
கோனோ வீடர் இடை உழவு செய்தால் மண்ணில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டுநுண்ணுயிர் எண்ணிக்கை மற்றும் செயல்பாடு அதிகரிக்கிறது.  உரப்பயன்பாடு கூடுகிறது.  வேரின் வளர்ச்சி மிகுந்த தூர்கட்டும் திறன் கூடுகிறது.
ஒரு குத்தில் அதிக பட்சமாக 35-40 கதிர் உள்ள தூர்களும் சராசரியாக  28 கதிர் உள்ள தூர்களும் கிடைக்க வழி உள்ளது.
வாளிப்பான நீண்ட கதிர்கள் மற்றும்  கதிரில் அதிக மணிகளின் எண்ணிக்கை கிடைக்க வழி வகுக்கிறது.

திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்வதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:

  • குறைந்த விதையளவு
  • குறைந்த நீர் தேவை
  • நாற்று விடுவதற்கு குறைந்த இடம் போதுமானது
  • வேலையாட்களின் எண்ணிக்கை குறைவு
  • குறைந்த இடுபொருள் செலவு
  • அதிகமான மகசூல்
  • வயலில் நல்ல காற்றோட்டம் இருப்பதால் பூச்சி ,நோய் மற்றும் எலித்தாக்குதல் மிகவும் குறைவு.