வேளாண் பொருள் உற்பத்தியின் மொத்த வருட இழப்பில், களைகளால் 45 சதவீதமும், பூச்சிகளால் 30 சதவீதமும், நோயினால் 20 சதவீதமும், மற்ற பூச்சிகளால் 5 சதவீதமும் இழப்பு ஏற்படுகிறது.
களைகளை முழுமையாக அழிப்பதற்க்குச் சாத்தியக் கூறுகள் இல்லை என்ற போதிலும் அதைக் கட்டுப்படுத்துவது சாத்தியம்.
இனி களைகளைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பார்ப்போம்
இரசாயன களைக்கொல்லியும், பூச்சிக் கொல்லியும் நமது சுற்றுச்சூழலை பாதிப்பதோடு, குடிநீர் மற்றும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்குகிறது. ஆகவே நமது சந்ததிகள் உயிர் வாழவும், வளங்களை பாதுகாக்கவும் நஞ்சில்லா முறைகளை நாம் கையாள வேண்டும்.
மாட்டுச் சிறுநீரைக் களைக் கொல்லியாகப் பயன்படுத்தல்
இந்த முறையானது பயிர்கள் மீது படாமல் மற்றும் தண்ணீர் (மாட்டுச் சிறுநீரில் )ஏதும் கலக்காமலும் தொடர்ச்சியாக மூன்று முறைகள் களைகள் மீது நன்கு நனையும் படி தெளித்தல் வேண்டும். தன்மூலம் களைகள் மக்கி மண்ணிற்குச் சிறந்த உரமாகவும் மண்ணின் வளம் மேம்படும் என்பது கூடுதல் சிறப்பு. மாட்டுச் சிறுநீருடன் தேவைக்கேற்ப எலுமிச்சம் பழம் டேங்கிற்கு ( 1/2 முதல் 1 பழம் வரையும்) பயன்படுத்திப் பலன் பெறலாம்.
நிலத்தில் ஈரம் இல்லாதபொழுது மாட்டுச் சிறுநீரைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் பாய்த்த பின்போ அல்லது மழைக் காலத்திலோ பயன்படுத்துதல் கூடாது. ஏனெனில், மாட்டுச் சிறுநீரில் தழைச்சத்து மிகுந்து காணப்படுகிறது. அவ்வாறு, ஈரம் இருக்கும் பொழுது பயன்படுத்தினால் களைகள் நன்கு செழிப்புடன் வளர்ந்துவிடும்.
உப்பு
சமயலில் பயன்படுத்தப்படும் உப்பையும் நாம் களைக் கொல்லியாகப் பயன்படுத்தி பயனடைய முடியும். ஒரு பங்கு உப்பிற்கு எட்டு பங்கு தண்ணீர் கலந்து களைகளின் மேல் தெளிக்கலாம் ( வலுவான கலவைக்கு – ஒரு பங்கு உப்பிற்கு மூன்று பங்கு தண்ணீர் சேர்க்கலாம்) இதனுடன் ஒட்டும் திரவமாக காதி சோப் கரைசலைப் பயன்படுத்த வேண்டும்.
உப்புக் கரைசல் என்பது மண்ணிற்கு ஆபத்தானது. இது களைகளின் மீது மட்டுமே படுவது போன்று தெளிக்க வேண்டும். அதிகமாகப் பயன்படுத்தினால் மண்ணின் கார அமில நிலை மாற வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment