our inspiration

Wednesday, November 24, 2010

திருந்திய நெல் சாகுபடி (ஒற்றை நாற்று முறை)

 திருந்திய நெல் சாகுபடி (ஒற்றை நாற்று முறை)

குறைந்த இடுபொருள் செலவில் அதிக நெல் உற்பத்தி செய்வதன் மூலம் சாகுபடியை ஒரு இலாபகரமான வேளாண் தொழிலாக்க முடியும்அதோடு நஞ்சுகளையும் ரசாயனஉரங்களையும் தவிர்பதன் மூலம் நஞ்சில்லா உணவையும் பெற முடியும், அத்தைகையதொரு தொழில் நுட்பம்தான் “தீவிர நெல் சாகுபடி” என்ற ஒருங்கிணைந்த நெற்பயிர் நிர்வாகம்.

ஒருங்கிணைந்த  நெற்பயிர் நிர்வாகத்தின் அம்சங்கள்

  • குறைந்த இடுபொருள் செலவு
  • 15 நாட்கள் வயதுடைய நாற்றுக்கள்
  • குத்துக்கு ஒரு நாற்று
  • அதிக இடைவெளி விட்டு சதுர நடவு முறை (25 x 25 செ.மீ.)
  • களைக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களைத் தவிர்த்தல்
  • நஞ்சை நிலத்திற்குரிய சுழல் கூம்பு வடிவ களை எடுக்கும் கருவி (கோனோ வீடர்மூலம் களைகளை அமுக்கி சேற்றை கலக்கி விடுதல்.
  • நீர் மறைய நீர் கட்டி நீரின் அளவை குறைத்தல்
  • அங்கக கழிவுகளை உபயோகித்து பச்சை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து நிர்வகித்தல்




                                                      பாய் நாற்றங்கால்

நாற்றுகள் தயார் செய்தல்

  • 15 நாட்களில் வாளிப்பான நாற்றுகளை பெற திருந்தியமைக்கப்பட்ட பாய் நாற்றங்கால் முறையை பயன்படுத்தப்படவேண்டும்.
  • நாற்றங்காலை வடிகால் வசதியுடன் நீர் ஆதாரத்திற்கு அருகாமையில் தேர்ந்தெடுக்கவும்.
  • ஒரு எக்டர் நடவு செய்யத் தேவையான நாற்றங்கால் பரப்பு 100 சதுர மீட்டர் (2.5 சென்ட்)




  • ஒரு மீட்டர் அகலமும், 100 மீட்டர் வரை நீளமும், 5 செ.மீ.  உயரமும்கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைக்கவும்.
  • பாத்திகளின் மேல் 300 காஜ் கனமுள்ள வெள்ளை/கருப்பு பாலித்தீன் விரிப்பு விரிக்கவும்.


  • வளமான  வயல் மண்ணுடன் நன்கு பொடியாக்கிய  தொழு உரத்தைச் சேர்த்து அதன்மேல் 4 செ.மீ  அளவிற்கு நிரப்பவும்
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவுடன் விதை நேர்த்தி செய்யப்பட்ட  5 கிலோ முளைக்கட்டிய  விதையை ( எக்டர் நடவு செய்யவிதைத்து பின் மண்ணால் நன்கு மூடிவிடவேண்டும்.


  • அதன்மேல் சுமார் 4இஞ்ச் அளவு அதே ரகநெல்லின் வைக்கோல் போட்டு மூடிவிடவேண்யடும்
  • நாட்கள் வரை பூவாளியில் தண்ணீர் தெளித்து பின் பாத்தி நனையும் வகையில் வாய்க்காலில் தண்ணீர் கட்டவும்.வைக்கோலையும் எடுத்து விடவேண்டும்
  • விதைத்த 9ம் நாள் 3சதம் பஞ்சகாவிய கரைசலை பூவாளி மூலம் மாலையில் தெளிக்கவும்.
  • 14ம் நாள் 12 முதல் 16 செ.மீஉயரமுள்ள  நாற்றுக்களை மெதுவாக அசைத்து பிரித்து எடுத்து நடவு வயலுக்கு கொண்டு போகலாம்.  அங்கு ஒற்றை நாற்றுக்களை வேர் அறுபடாமல் எளிதில் பிரித்து நடவு செய்யலாம்.



தக்கைப்பூடு


சேற்றில்அமிழ்த்தப்பட்ட தக்கைப்பூடு

நடவு செய்தல்

உழவுக்கு,மாட்டு ஏர் மற்றும் பவர்டில்ல்ர் ஏற்றது

  • வயலில் பசுந்தாள் உரப்பயிர்களைப் (கொழிஞ்சி,தக்கைப்பூடு,சணப்பை)      பயிரிட்டு அவற்றைப் பூக்கும் பருவத்தில் மடக்கி உழுது சேறுகலக்கவேண்டும்
  • குறுவை மற்றும் சம்பா பருவத்தில் எக்டருக்கு 12.5 டன் மக்கிய குப்பை அல்லது தொழு உரத்தை இட்டு நன்கு உழவு செய்யவும்.
பின் நிலத்தை நன்கு சமன் செய்யவும்

நடவு இடைவெளி

14 நாள் வயதுடைய  நாற்றுக்களை குத்துக்கு ஒரு நாற்றாக வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 25 செ.மீஇடைவெளியில் சதுர முறையில் நடவு செய்யவேண்டும்.



கோனோ வீடர் கருவி மூலம் களைக் கட்டுப்பாடு

நடவு செய்த 15ம் நாள் முதல் 3 அல்லது 4 முறை கோனோ வீடர் கருவி மூலம் வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்குச் செடி உள்ள இடைவெளியில் இடை உழவு செய்து களைகளை சேற்றில் அமுக்கிவிடவேண்டும்.  கருவியில் மாட்டாத களைகளை கையால் எடுத்து விடலாம்.  இக்கருவி மூலம் ஒரு எக்டர் வயலில் இருபுறம் இயக்க 6-8 கூலி ஆட்கள் தேவைப்படுகிறது.



வயலில்அசோலா இடல்

வயலில் அசோலா எனும் பெரணிவகைத் தாவரத்தை இடும்பொழுது  அது கூட்டுவாழ்க்கைமுறை மூலம் நெற்பயிருக்குத் தேவையான தழைச்சத்தினைக் கொடுத்து,சேற்றுவயலிலிருந்து வெளியேரும் வாயுக்களையும் உறிஞ்சிக்கொள்கிறது அதன்மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் தடுக்கிறது.


நெல்வயலில் அசோலா


மேலுரமிடல்

நட்ட 15-ம் நாள் கோனோ வீடர் மூலம் இடை உழவு செய்த பின் முதல் மேலுரமாக நன்கு மட்கிய மாட்டுச்சானம் அல்லது தொழு உரம்  இடலாம்.  பின்னர் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை தேவைப்பட்டால் எக்டருக்கு  500லிட்டர் அளவில் ஜீவாமிர்தக்க்ரைசல் இடலாம்.
கோனோ வீடர் இடை உழவு செய்தால் மண்ணில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டுநுண்ணுயிர் எண்ணிக்கை மற்றும் செயல்பாடு அதிகரிக்கிறது.  உரப்பயன்பாடு கூடுகிறது.  வேரின் வளர்ச்சி மிகுந்த தூர்கட்டும் திறன் கூடுகிறது.
ஒரு குத்தில் அதிக பட்சமாக 35-40 கதிர் உள்ள தூர்களும் சராசரியாக  28 கதிர் உள்ள தூர்களும் கிடைக்க வழி உள்ளது.
வாளிப்பான நீண்ட கதிர்கள் மற்றும்  கதிரில் அதிக மணிகளின் எண்ணிக்கை கிடைக்க வழி வகுக்கிறது.

திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்வதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:

  • குறைந்த விதையளவு
  • குறைந்த நீர் தேவை
  • நாற்று விடுவதற்கு குறைந்த இடம் போதுமானது
  • வேலையாட்களின் எண்ணிக்கை குறைவு
  • குறைந்த இடுபொருள் செலவு
  • அதிகமான மகசூல்
  • வயலில் நல்ல காற்றோட்டம் இருப்பதால் பூச்சி ,நோய் மற்றும் எலித்தாக்குதல் மிகவும் குறைவு.

No comments:

Post a Comment