our inspiration

Tuesday, July 19, 2011

மாசானபு புகோகாவின் சிந்தனைத் துளிகள்






1. வனத்தில் முளைக்கும் விதைகள்,, உழுத நிலம் கேட்பதில்லை

2. மழை மண்ணிலிருந்தோ விண்ணிலிருந்தோ உண்டாவதில்லை. அது மரங்களிலிருந்து உண்டாகிறது.


3. இயற்கை வேளாண்மை உலகின் எப்பகுதிக்கும் பொருந்தும்.


4. இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை.அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது. காலம் எவ்வளவுதான் மாறினாலும் வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும்

5. சுற்றுச்சூழல் கெடுவதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இயற்கையின் ஒரு பகுதியான மனிதனின் மனமும் மாசு படுகிறது. அதனால், மன இறுக்கம் மற்றும் தீமை பயக்கும் எண்ணங்கள் தோன்றுகின்றன.


6. நிலம் , நீர் , மரம் , பூச்சி -- இவைகளை அப்படியே விட்டுவிட்டு விளைச்சல் பெரும் வேளாண்மைதான் இயற்கை வேளாண்மை

7. உண்மையான சந்தோஷமான வாழ்க்கையை ஒருவன் இயற்கையோடு இணைந்துதான் அனுபவிக்கமுடியும்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியும்


எம். குப்புசாமி (Dinamani /1-6-2011)First Published : 01 Jun 2011 01:51:41 AM ஐ‌எஸ்‌டி

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. 1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் இன்றைய எத்தனால் உற்பத்தி 4,80,000 டன்தான். 2.5 கோடி டன் எங்கே? 4.8 லட்சம் டன் எங்கே? உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், மாதமொரு முறை பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தத் தவறுவதில்லை.

இந்த ஆண்டு இறுதிக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100 ஆகவும், டீசல் விலை ரூ. 70 ஆகவும் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்கள் செயலிழந்து நிற்கின்றனர்.

எத்தனால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு 1982-லேயே தமிழ்நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. இன்றுவரை அந்தக் குழுமத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. 1984-ல் ஏற்றுமதிக்கான அனுமதியை மத்தியப் பிரதேசத்தில் ஆரம்பிக்க அனுமதி கொடுத்துத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருக்க என்னென்ன இடையூறுகள் உண்டோ அவ்வளவையும் செய்து திட்டம் வராமலேயே செய்துவிட்டனர்.

2007-ல் திட்டத்தின் மகிமையை உணர்ந்து திட்டத்துக்கான அனுமதியை இந்தக் குழுமத்துக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு வழங்கியது. எங்கு நிதீஷ் குமாருக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்று கருதித் திட்டத்தை நிறைவேற்றாத வண்ணம் மத்திய அரசு தலையிட்டுத் திட்டத்துக்கு இடையூறு செய்து வருகிறது. இவ்வாறு இருப்பின் எப்படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இயலும்?

பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் எத்தனால் பம்ப் இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பப்படி பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து கொள்ளலாம். எத்தனாலில் மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு. எத்தனாலின் விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 20 தான். இது மட்டுமன்றி, எத்தனால் அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர். மற்ற நாடுகளைப் பார்த்தாவது இந்தியா திருந்துமா என்பது விடை காண முடியாத கேள்வி.

24% பெட்ரோலுடன் எத்தனால் கலந்து வாகனத்தில் எந்த மாற்றமுமின்றி வாகனத்தை ஓட்டலாம். வாகனத்தின் திறன் கூடுமேயொழியக் குறையாது. 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் மட்டும் கலந்து உபயோகிக்கலாம். இதற்கு என்ஜினில் மாற்றங்கள் செய்ய வேண்டும். எத்தனால் மட்டுமே பயன்படுத்தலாம். இதற்கான என்ஜின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. போர்டு குழுமம் பிரேசிலில் இந்த என்ஜின்களை உற்பத்தி செய்கிறது. எனவே, சென்னையிலும் போர்டு நிறுவனத்தால் உற்பத்தி செய்ய இயலும்.

இந்திய அரசு எத்தனால் விலையை லிட்டருக்கு ரூ. 27 என்று நிர்ணயித்துள்ளது. ஒரு டன் கரும்புக்கு ரூ. 2,500 கொடுக்க வேண்டுமெனில் எத்தனால் விலையைக் குறைந்தபட்சம் ரூ. 32 ஆக நிர்ணயிக்க வேண்டும். பங்கில் எத்தனால் விலை ரூ. 32; மத்திய அரசின் வரி 16% - ரூ. 5.12; பங்குக்குக் கமிஷன் 5% - ரூ. 1.85; போக்குவரத்துச் செலவு 50 பைசா மற்றும் இதர செலவுகள் 53 பைசா ஆக மொத்தம் ஒரு லிட்டர் எத்தனால் விலை ரூ. 40.

அமெரிக்காவில் ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து கொடுத்தால் உற்பத்தியாளருக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 6 அமெரிக்க அரசு இனாமாக வழங்குகிறது. 2022-ல் 11 கோடி டன் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. மக்காச்சோளம் மட்டுமன்றி "ப்ரையாரிக்ராஸ்' என்ற புல்லையும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இந்திய அரசு ஒரு லிட்டருக்கு ரூ. 5.12 வரியாக உற்பத்தியாளரிடமிருந்து வாங்குகிறது. இந்தச் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எப்படி இந்தியாவில் குறைக்க முடியும்?

எத்தனால் கலப்பதால் மாசு 50% கட்டுப்படுத்தப்படும். மத்திய அரசின் வரியை நீக்கிவிட்டால் எத்தனால் ஒரு லிட்டர் ரூ. 35-க்குக் கிடைக்கும். மக்கள் ரூ. 70-க்கு பெட்ரோல் போடுவதைவிட்டு ரூ. 35-க்கு எரிபொருளைப் பயன்படுத்தி மகிழ்வர். 24% எத்தனாலைக் கலக்கும்பொழுது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.75 குறையும். 85% எத்தனாலைக் கலக்கும்பொழுது ஒரு லிட்டருக்கு ரூ. 30 குறைந்து ரூ. 40-க்கு வாகன எரிபொருள் கிடைக்கும். இதைச் செய்ய பிரேசிலைப்போல் ஒரு குடியரசுத் தலைவர் இந்தியாவுக்குத் தேவை.

எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் கரும்பு, மக்காச்சோளம், குச்சிக்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைச் சத்துள்ள எல்லா பொருள்களும்.

உற்பத்தியும், லாபகரமுமான பொருள்கள் கரும்பு மற்றும் மக்காச்சோளம் மட்டுமே. இவை இரண்டிலும் கரும்பின் திறனே அதிகம். இந்தியா, பிரேசிலில் கரும்பு உற்பத்தியே அதிகம். அமெரிக்காவில் மக்காச்சோளம் பரவலாகப் பயிரிடப்படுவதால் எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு டன் கரும்பிலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள். (கரும்பு ஒரு டன்னுக்கு விலை ரூ. 2,500) சர்க்கரை - 100 கிலோ; சக்கை - 280 கிலோ. இதிலிருந்து 50 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொலாஸஸ் - 40 கிலோ. இதிலிருந்து 12 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய இயலும். மட்டி - 50 கிலோ.

எத்தனாலைத் தமிழகம் பயன்படுத்தத் தொடங்கினால் 10 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 40 லட்சம் டன் தேவைப்படும். மொலாஸûஸ மட்டும் பயன்படுத்தி 40 லட்சம் டன் எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டுமெனில் 4,156 கோடி டன் சர்க்கரையும் உடன் உற்பத்தியாகும். எனவே, இத்திட்டம் சாத்தியப்படாது.

ஆகவே, இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். அதற்கு கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்யாமல் நேரடியாக எத்தனாலை உற்பத்தி செய்வோமானால் இது சாத்தியமான திட்டம் மட்டுமன்றி, உடன் அமல்படுத்தவும் முடியும்.

இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால், பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் - 25 கிலோ; கழிவு (தீவனம்) - 330 கிலோ.

மக்காச்சோளத்தை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. மக்காச்சோளத்திலிருந்து மிக உயர்ரக குடிசாராயத்தைத் தயாரிக்கலாம்.

தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது. இதிலிருந்து 1,15,200 டன் குடிசாராயம் தயாரிக்க முடியும். மக்காச்சோளத்துக்கு டன்னுக்கு ரூ. 12,000 உறுதி செய்யப்பட்டால் உற்பத்தியை 8 லட்சம் டன்னாக உயர்த்த இயலும்.

தமிழகத்தின் குடிசாராயத் தேவையே 2,50,000 டன்தான். இப்போது குடிசாராயம் மொலாஸஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும்.

தமிழகத்தில் 7.2 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. சராசரியாக ஏக்கருக்கு 40 டன் விளைகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும். ஆல்கஹால் 2,76,400 டன்.
இது குடிசாராயத்துக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. குடிசாராயத்துக்கு மக்காச்சோளத்தைப் பயன்படுத்துவோமேயானால் மொலாஸûஸ முழுமையாகப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் ரசாயனத் தொழிற்சாலை அபரிமிதமான வளர்ச்சியை அடையும். உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.

கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏக்கருக்கு 120 டன் என்பது பெரிய செய்தியல்ல. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்

புறக்கணிக்கப்படும் விவசாயிகள்

பி.எஸ்.எம். ராவ் (Dinamani-19/5/2011)First Published : 19 May 2011 03:49:00 AM IST

விவசாயக் கடன்கள் வழங்குவதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டிவிடுவதாக மத்திய அரசு மார்தட்டிக் கொண்டிருக்கிறது. 2004-ம் ஆண்டில் இருந்து ஒவ்வோராண்டும் இந்த இலக்குகள் அதிகரித்துக்கொண்டே வந்திருக்கின்றன. ஆனாலும் அந்த இலக்குகள் தவறவிடப்படவில்லை. 2011-12-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.4.75 லட்சம் கோடி விவசாயக் கடன்களை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையும் அரசு நிறைவேற்றிவிடும் என்பதில் சந்தேகமேயில்லை.

அடுத்த பட்ஜெட் உரையில் இன்னும் கூடுதலாக இலக்கு நிர்ணயிக்கப்படும் என்பதும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்படும் ஓர் அரசு, இப்படி விவசாயிகளுக்குக் கடன்களை அள்ளி வழங்குகிறதே, அப்படியானால் நாட்டில் விவசாயிகள் அனைவருக்கும் கடன்கள் கிடைக்கின்றனவா? எல்லோரும் சுபீட்சமாக இருக்கிறார்களா? அதுதான் இல்லை.

அரசு கூறிக்கொண்டிருக்கும் புள்ளிவிவரங்கள் எதுவும் நடைமுறையில் வெளிப்படவில்லை. பெரும்பான்மையான விவசாயிகள் இன்னமும் முறையான கடன் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வங்கிகள் போன்ற அமைப்புகளிடமிருந்து கடன்கள் கிடைக்காததால், தனியாரிடம் அநியாய வட்டிக்குக் கடன்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இதில் சிறு மற்றும் குறு விவசாயிகள்தான் அதிகம்.
அரசு வழங்கும் விவசாயக் கடன்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முறையாகச் சென்றடையவில்லை என்று எத்தனையோ ஆய்வுகள் தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கின்றன.

சிறு விவசாயிகளில் 87 சதவீதம் பேருக்கும், குறு விவசாயிகளில் 70 சதவீதம் பேருக்கும் அமைப்பு சார்ந்த கடன்கள் கிடைக்கவில்லை என்று உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன், ஒட்டுமொத்தமாகவே விவசாயிகளில் 51 சதவீதம் பேருக்கு எந்தவிதமான வங்கிச் சேவைகளும் கிடைக்கவில்லையாம்.

நாட்டில் மொத்தமுள்ள 8.93 கோடி விவசாயக் குடும்பங்களில் 4.59 கோடி (51.4 சதவீதம்) குடும்பங்களுக்கு வங்கிக் கடன்களும், தனியார் கடன்களும் கிடைக்கவில்லை என நிதி வகையில் அனைவரையும் உள்ளடக்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட ரங்கராஜன் கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கிராமம் கிராமமாக வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டு வரும் நிலையிலும், வெறும் 27 சதவீத விவசாயக் குடும்பங்களுக்கு மட்டுமே வங்கிகள் மூலமாகக் கடன்கள் கிடைக்கின்றன. அதில் மூன்றில் ஒரு பங்கினர் வங்கிக் கடன்களுடன் தனியாரிடமும் கடன் வாங்கித் துன்பப்படுகிறார்கள்.

விவசாயக் கடன்கள் தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட சாரங்கி கமிட்டி, தனது ஆய்வறிக்கையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமர்ப்பித்தது. குறு விவசாயிகளில் வெறும் 14 சதவீதம் பேருக்கு மட்டுமே வங்கிக் கடன்கள் கிடைக்கின்றன என்று அந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது. விவசாயக் கடன்கள் வழங்கப்படுவதன் வளர்ச்சி 22.9 சதவீதத்தில் இருந்து 10.6 சதவீதமாகக் குறைந்திருப்பதாக அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.

அரசு கூறுவதைப்போல விவசாயக் கடன்கள் எல்லோருக்கும் போய்ச் சேர்ந்துவிடவில்லை என்பதற்கும், விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கும் இவையெல்லாம்தான் ஆதாரங்கள்.

பெரும்பான்மையான விவசாயிகளுக்கு முறையான வங்கிக் கடன்கள் கிடைப்பதில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. அதாவது, 24 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை வட்டி வசூலிக்கும் தனியாரிடம் கடன் வாங்கிப் பயிர் செய்வதைத்தான் இவர்கள் நம்பியிருக்கிறார்கள். பின்தங்கிய கிராமப்புறங்களில்தான் வட்டிவிகிதம் கூடுதலாக இருக்கிறது. இதனால் பணக்கார விவசாயிகளைவிட ஏழை விவசாயிகள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். தனியார் கூடுதலாக வட்டி வசூலிக்கிறார்கள் என்பதால், அமைப்பு சார்ந்த கடன்கள் நியாயமான வட்டியில் கிடைக்கின்றன என்று அர்த்தமில்லை.

ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் வங்கிகள் போன்ற அமைப்பு சார்ந்த கடன்களுக்கேகூட வெவ்வேறு வகையான வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுகின்றன என்பது தெரியவந்திருக்கிறது.
7 முதல் 16 சதவீத வட்டியுடன் ஆய்வுக் கட்டணம், தவணைக் கட்டணம், சேவைக் கட்டணம், கடன் பரிசீலனைக்கான கட்டணம் எனப் பல்வேறு வகையில் விவசாயிகளிடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது. இதுபோக, பயிர்க்காப்பீடு பெற வேண்டும் என்கிற நிபந்தனை. அதற்கும் அதிகபட்சமான பிரீமியம் செலுத்தியாக வேண்டும்.

இவை எல்லாம் முடிந்தபிறகும் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்கிற நிலைமை. இத்தனை கஷ்டப்பட்டு வங்கிகளில் கடன் வாங்குவதைவிடத் தனியாரிடமே கடன் வாங்கிவிடலாம் என்கிற எண்ணமே விவசாயிகளிடம் மேலோங்கி விடுகிறது.

உண்மையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தாண்டியும் வங்கிக் கடன்கள் வழங்கப்படுகின்றன என்று அரசு தரும் புள்ளிவிவரங்களே தவறானவைதான். நாட்டில் 72 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள் என்பதும், அவர்களது முக்கியத் தொழில் விவசாயம் என்பதும் அரசே தரும் புள்ளிவிவரங்கள். ஆனாலும், வங்கிகள் வழங்கும் ஒட்டுமொத்தக் கடன்களில் விவசாயக் கடன்களின் விகிதம் ஒவ்வோராண்டும் குறைந்து கொண்டேதான் வந்திருக்கிறது. மொத்தக் கடனில் 18 சதவீதம் அளவுக்கு விவசாயத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்கிற விதியும் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது.

கடந்த 2003 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலத்தில் அரசுத்துறை வங்கிகள் வழங்கிய மொத்தக் கடனில் சராசரியாக 14.5 சதவீதம் முதல் 17.2 சதவீதம் மட்டும் வேளாண்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தனியார் வங்கிகள் 10.9 முதல் 15.9 சதவீதம் வரையே விவசாயத்துக்கு கடன் வழங்கியிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், வேளாண் துறையில், சிறு மற்றும் குறு விவசாயிகளின் விகிதத்துக்கு ஏற்ப அவர்களுக்கு வங்கிக் கடன் சென்றடையவில்லை என்பதுதான்.

2006-2007-ம் ஆண்டில் வங்கிகள் வழங்கிய மொத்தக் கடன் மதிப்பில் வெறும் 27 சதவீதம் மட்டுமே 1 முதல் 2 ஹெக்டேர் நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்குக் கிடைத்திருக்கிறது. குறு விவசாயிகளுக்கு 26.67 சதவீதம் கடன் கிடைத்திருக்கிறது.

இதில் அதிர்ச்சியளிக்கும் அம்சம் என்னவென்றால், விவசாயிகள் மற்றும் பின்தங்கிய மக்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே தொடங்கப்பட்ட சில கூட்டுறவு வங்கிகள் போன்ற அமைப்புகள் பலவும் தங்களது நோக்கத்திலிருந்து விலகிச்சென்று கொண்டிருக்கின்றன என்பதுதான்.

கடன் விநியோகத்தை வலுப்படுத்த வேண்டும், நிதி வகையில் அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்று அரசு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த அமைப்புகள் சத்தமேயில்லாமல் வேளாண் கடன்களைக் குறைத்து வருகின்றன. கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 1992-93-ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடன்களில் விவசாயிகளுக்கு மட்டும் 62 சதவீதக் கடன்கள் வழங்கப்பட்டன. இதுவே 2009-10-ம் நிதியாண்டில் வெறும் 15.67 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
கூட்டுறவு வங்கிகளும் நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் கிளைகளும் சேர்ந்து வேளாண்மையைச் சுபீட்சமாக்கியிருக்க வேண்டும். ஆனால், விவசாயக் கடன்களை அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டே வந்திருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

ஒரு பக்கம் கூட்டுறவு வங்கிகள் தங்களது லாபத்தை இழந்து நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கிராமப்புறங்கள் பக்கமே போக விரும்பாத வர்த்தக வங்கிகள் எல்லாப் பகுதிகளிலும் கடைவிரித்து லாபத்தை அள்ளிக்கொண்டிருக்கின்றன.

எல்லாம் வணிகமயமாகிவிட்டதால், 60 சதவீதம் பேருக்கு வேலையும், நாடு முழுமைக்கும் உணவும் தரும் ஒரு துறைக்கு கடன் வழங்குவதை யாருமே விரும்பவில்லை என்பதும்தான் உண்மை.

இதுபோலவே கிராமப்புறங்களில் வசிக்கும் பின்தங்கிய மக்களுக்காகக் கடன்கள் வழங்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பிராந்திய ஊரக வங்கிகளும் 1992-93-ல் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமலான பிறகு தங்களது பாதைகளை மாற்றிக் கொண்டுவிட்டன. பின்தங்கிய மக்களுக்குக் கடன்கள் வழங்குவதைக் குறைத்துக் கொண்டன.

நூறுசதவீதம் பின்தங்கிய மக்களுக்கு மட்டுமே கடன்கள் வழங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகள் இப்போது 10 சதவீதம் கடன்களை மட்டும் பின்தங்கிய மக்களுக்கு ஒதுக்குவது என முடிவு செய்துவிட்டன.

கிராமப்புற மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய இந்த வங்கிகள் நகர்ப்புறங்களில் கிளைகளை விரிவுபடுத்துவதிலேயே தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இப்படி மற்ற வர்த்தக வங்கிகளைப்போலவே லாப நோக்குடன் செயல்படுவதற்கு, பிராந்திய ஊரக வங்கிகள் தேவையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இன்னொரு பக்கம் வர்த்தக நோக்குடன் செயல்படும் வங்கிகள், ஏற்கெனவே கிராமப்புறங்களில் செயல்பட்டு வந்த தங்களது கிளைகளை ஒவ்வொன்றாக மூடிக்கொண்டிருக்கின்றன. ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களில் இது தெளிவாகத் தெரிகிறது.
வேளாண்மையில் அரசு முதலீடு குறைப்பு, இடுபொருள்களின் விலை உயர்வு, விளை பொருள்களுக்கு லாபமில்லாத விலை உள்ளிட்டவைதான் விவசாயத்துறையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்குக் காரணம் என்பதை பல்வேறு ஆய்வுகளும் உறுதி செய்திருக்கின்றன.

தனியாரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கியதே விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் என்பதையும் நாம் அறிவோம். வங்கிகள் போன்ற அமைப்பு சார்ந்த கடன்கள் வழங்கும் முறை தோல்வியடைந்துவிட்டதையே இவை காட்டுகின்றன.

புதிய பொருளாதாரக் கொள்கை அமலான பிறகு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை ஒவ்வோர் அரசும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், உண்மையில் அரசின் நடவடிக்கைகளும் தேர்ந்தெடுத்திருக்கும் பாதையும் தேவையற்றவர்களை, ஏழைகளைப் புறக்கணிக்கும் வளர்ச்சியை நோக்கியே அமைந்திருக்கின்றன.

நாட்டுக்கே உணவளிக்கும் சமூகம் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறது. சிறு மற்றும் குறு விவசாயிகள் கடன்கள் கிடைக்காமலும், லாபம் இல்லாமலும் துன்பப்பட்டு வருகின்றனர். எல்லாவற்றையும் மறைத்துவிட்டு, விவசாயத்துக்கு அதிகக் கடன்கள் வழங்கப்படுவதாக அரசு கூறிக் கொண்டிருக்கிறது. கடன் இலக்குகள் எட்டப்பட்டுவிட்டதால் மட்டுமே விவசாயம் விருத்தியடைந்துவிடாது.

தோல்விகளை ஒப்புக்கொண்டு உண்மையான அக்கறையுடன் திட்டங்களை வகுப்பதற்கு ஆட்சியாளர்கள் முன்வந்தால் மட்டுமே விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதுகாக்க முடியும். அதுதான் அரசு கூறிக்கொண்டிருக்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழி.

வீரியம் இழந்த புதிய விதைப்புரட்சி

ஆர்.எஸ்.நாராயணன், Dinamani/26-05-2011) First Published : 26 May 2011 12:29:53 AM IST

எதிர்கால உணவுத் தேவையை நிறைவேற்ற இந்தியா 2020-ல் நுழையும்போது அரிசி உற்பத்தி மட்டும் 12.21 கோடி டன்னுக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று மத்திய திட்டக்கமிஷன் இலக்கு நிர்ணயித்தது.

இன்றுள்ள வளர்ச்சி வீதம் நீடித்தால்-அதாவது ஆண்டுக்கு 1.34 சதம் என்றால் 2020-ல் 10.6 கோடி டன் அரிசிதான் இயலும். 12.21 கோடி டன் இலக்கை எப்படி நிறைவேற்றுவது என்ற கேள்விவந்தபோது, 2007-ல் தேசியப் பசிப்பிணிப் பாதுகாப்பு மிஷன் உருவாக்கப்பட்டு, 2011-12-ல் அரிசி உற்பத்தியை 10 கோடி டன்னுக்கு உயர்த்த முடிவானது. அரிசியுடன் கோதுமை மற்றும் பருப்பு உற்பத்தி உயர்வுக்கான வரையறையும் தேசியப் பசிப்பிணிப் பாதுகாப்பு மிஷனில் செய்யப்பட்டது. இவற்றுக்காக 4,882 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் அரிசி உற்பத்தி உயர்வுக்கான பங்கு 1963 கோடி ரூபாய். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ""கிழக்கு மாநிலங்களில் இரண்டாவது பசுமைப்புரட்சி'' என்று கோஷமிட்டு, ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா நிதியிலிருந்து 400 கோடி ரூபாய் பணத்தை மேற்படி மாநில அரிசி, பருப்பு, எண்ணெய் வித்து, உற்பத்தி உயர்வுக்காக ஒதுக்கியது நினைவிருக்கலாம். கிழக்கு மாநிலங்கள் என்றால் இவற்றில் பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒரிசா, கிழக்கு உ.பி. அடங்கும்.

இந்தியாவின் கிழக்குப் பிராந்தியங்களில் அரிசியின் உற்பத்தித்திறன் - அதாவது தலா ஹெக்டேர் விளைச்சல் பஞ்சாப் - ஆந்திரப் பிரதேசம் - தமிழ்நாடு அளவைவிடக் குறைவாயிருப்பதன் காரணம் வீரிய ரகம் அல்லது ஒட்டுவீரிய ரக விதைப்பயன் குறைவு என்று கூறும் கிரிக்கெட் விவசாய அமைச்சர் சரத்பவார் சீனாவைப் பின்பற்ற வேண்டுமென்று கூறுகிறார்.

சீனாவில் சுமார் 3 கோடி ஹெக்டேர் நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் சுமார் 2 கோடி ஹெக்டேர் நிலத்தில் வீரிய ஒட்டு ரக நெல் பயிராகிறது. சீனாவில் வீரிய ஒட்டு ரகம் சுயம்பூ ஐ.ஆர்.ஆர்.ஐ. மணிலா தயாரிப்பு அல்ல. 1964-ல் சீனாவில் தொடங்கப்பட்டுள்ள அந்தத் தொழில்நுட்பத்தில் அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் ஒரு வரிசையில் மலட்டு நெல்லும் ஒரு வரிசையில் வீரிய ரகமும் நட்டு வீரிய ஒட்டு என்ற ஹைபிரீட் விதை நெல் உற்பத்தியாவதாக ஒரு கருத்துண்டு.

மலட்டு நெல்லையும் வீரிய நெல்லையும் கலந்து வீரிய ஒட்டு விதை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அறிந்த இந்திய அரிசி விஞ்ஞானி ரிச்சாரியோ, இந்தியாவுக்கு ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் வேண்டாம் என்று ஃபோர்டு பவுண்டேஷனை எதிர்த்துப் போர் தொடுத்தார். ரிச்சாரியோ, கட்டாக் அரிசி ஆய்வு நிலையத்தின் தலைமை விஞ்ஞானியாகவும் டைரக்டராகவும் செயல்பட்டார்.

ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் வேண்டாம் என்றதால் அவரை ஓரம் கட்டினார்கள். அவர் வழக்குத் தொடர்ந்தார். அவருக்குச் சம்பளம் நிறுத்தப்பட்டது. முடிவில் இதய நோய் வந்து இறந்துபோனார். ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் விதையை அப்போதே அவர் வேண்டாம் என்றார். இப்போதுதான் மத்திய அரசு ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் வீரியம் இழந்ததை உணர்கின்றனர். இப்போது சீனாவிலிருந்து வீரிய ஒட்டு விதை நெல்லை இறக்குமதி செய்யலாமென்று யோசிக்கப்படுகிறது.

சீனாவின் உற்பத்தித்திறன் 6.61 டன் நெல். இந்தியா 3.37 டன். இதன் காரணம் வீரிய ஒட்டு ரக நெல் மட்டுமல்ல. சீனாவில் 90 சதவீத சாகுபடி நிலம் நீர்வளம் நிரம்பியது. இந்தியாவில் சுமார் 50 சதவீத நெல் சாகுபடி நிலம் மட்டுமே நீர்வளம் உள்ளது. மானாவாரி நெல் சாகுபடி சீனாவில் இல்லை. தவிரவும் இந்தியாவைவிட சீனாவில் ரசாயன உரம் அதிகம் வழங்கப்படுகிறது. ஆகவே, சீனாவிலிருந்து வீரிய ஒட்டு விதை நெல்லை இறக்குமதி செய்வதால் மட்டும் உற்பத்தியை உயர்த்த இயலாது. நமது சூழ்நிலைக்கு ஏற்ப நல்ல மகசூல் தரக்கூடிய நெல் விதைகளைத் தேர்வு செய்வது நல்லது.

அரிசி உற்பத்தியை உயர்த்த வீரிய ஒட்டு நெல் விதைகளே சரியான தீர்வு என்று கூறிய அமைச்சர் சரத் பவாரின் யோசனையை ஏற்று கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் உள்ள அனைத்து அரிசி ஆராய்ச்சி நிலையங்களும் முழு மூச்சில் செயல்பட்டு வெளியிட்ட வீரிய ஒட்டு எதுவுமே நல்ல பலன் தரவில்லை. குறிப்பாக, கிழக்குப் பிராந்தியத்தில் தோல்வியே.

தோல்விக்கு என்ன காரணம் என்று யோசித்தபோது, இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விதை ரகங்கள் முதற்கண் தடுமாறும் தட்பவெப்பத்தைத் தாக்குப் பிடிக்க வேண்டும். ஆனால் அந்த திறன் அவற்றிற்கு இல்லை.

மழை வெள்ளத்தால் பாதிப்படையாத மடுவு முழுங்கி போன்ற பல ரகங்கள் கங்கைப் பிரதேசங்களில் உண்டு. இதற்கு நேர்மாறாக நீர் இல்லாமல் வறட்சியுறும் சூழ்நிலைக்கு ஏற்ப வறட்சி தாங்கும் நெல்விதை ரகங்களும் உண்டு. குளிரைத் தாங்கி வளரும் நெல் ரகங்களும் உண்டு. உவரைத் தாங்கி வளரும் நெல் ரகங்களும் உண்டு. மானாவாரி ரகங்களும் உள்ளன. மாநில அளவில் புவியியல் தட்பவெப்ப மாற்றங்களை அனுசரித்துப் பயிராகும் விதை ரகங்கள் வீரிய ஒட்டு ரகங்களை விடவும் விளைச்சல் கூடுதலாயுள்ளன.

வீரிய ஒட்டு ரகங்களை சிறு, குறு விவசாயிகளாலும் பழங்குடி விவசாயிகளாலும் ஏற்க முடியாது. வீரிய ஒட்டுரக நெல்லுக்கு ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். அவற்றின் சாகுபடி அடக்கச் செலவும் அதிகம் என்பதால் கிழக்குப் பிராந்திய விவசாயிகள் ஏற்க மறுக்கின்றனர். எனினும், பணவசதியுள்ள விவசாயிகளுக்கு தட்பவெப்பப் பிரச்னை இல்லாத புவியியல் சூழல் உள்ள நிலங்களில் மட்டுமே சீனாவில் விளையக்கூடிய உற்பத்தித்திறனைப் பெற முடியும், பெற்றும் உள்ளனர். ஆனால், தட்பவெப்பத்தை அனுசரித்து எல்லா நிலங்களுக்கும் பொருந்தும் விதை ரகங்கள்தான் இன்றைய தேவை.

குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே சிறப்பாக விளையும் சீன வீரிய ஒட்டு பெரும்பாலான இடங்களுக்குப் பொருந்தாது. எதிர்பார்க்கும் விளைச்சலைப் பெற முடியாது என்று வேளாண் துறைசார்ந்த விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரிசா மாநிலத்தில் பருவம் - பட்டம் - புவியியல் தட்பவெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய பல பாரம்பரிய நெல் விதைகளைப் பயிர் செய்து வெற்றி கண்டுள்ள நடாபர் சாரங்கி என்ற விவசாயியின் வெற்றிக்கதை விவசாய விஞ்ஞானிகளின் கவனத்தை மிகவும் கவர்வதாயுள்ளது.

77 வயதாகும் சாரங்கி, ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர். கோர்தா மாவட்டத்தில் நரிஷோ என்ற கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் 350 வகையான நெல் ரகங்களை விதைப் பயனுக்கென்றே சாகுபடி செய்து உள்ளூர் மக்களுக்கு வழங்குகிறார். அவருடைய பாரம்பரிய விதைகளை வாங்கிச் செல்லும் விவசாயிகள் நல்ல லாபத்தில் விவசாயம் செய்வதுடன் விளைச்சலும் கணிசமாயுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

பசுந்தாள் உரம், இயற்கை உரம் கொண்டு நெல் பயிரிட்டு விளைந்ததை அறுவடை செய்து அரிசியாக்கி மணக்க மணக்க உண்பதுடன் நல்ல விலைக்கு விற்பனையும் செய்கின்றனர். சாரங்கி சேகரித்துள்ள பாரம்பரிய விதைகளின் பெயர்களில் பக்திமணமும் உண்டு. உதாரணம்: கேதார கௌரி, பத்ம கிஷோரி, கோவிந்த போக், காஸ்காமினி, ரத்னசூடி, கன்னையா பத்தியா, காலாஜீரா (கருப்பு சீரகச்சம்பா). இவரிடம் உள்ள மடுவு முழுங்கி விதைகள் வெள்ளம் வடிந்த பிறகும் 25 கிளைகள் (டில்லர்) வெடித்து வளர்கின்றன. வெள்ளத்தில் தலை உயர்ந்து வளரும். அதேபோல் சாரங்கி வழங்கும் வறட்சியைத் தாங்கி வளரும் நெல் பயிரின் தண்டு மிக மிக உறுதியுடன் விளங்குகின்றனவாம்.

நாட்டுக்கு ஏற்ற விதை நெல் ரகங்களை நல்ல முறையில் தேர்வு செய்து இனப்பெருக்கம் செய்யும் பணியை உண்மையில் வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும். பணம் என்னவோ கோடிக்கணக்கில் நாட்டுக்குத் தேவையற்ற விதை ரகங்களைக் கண்டுபிடிப்பதில் பல்கலைக்கழகங்கள் செலவு செய்வது உண்மைதான்.
இதில் வேடிக்கை என்னவென்றால் பணச்செலவே இல்லாமல் சாரங்கி கண்டுபிடித்த நாடியா ஃபூலோ, சோரா, காலாக்கியரி போன்ற மானாவாரி நெற்பயிருக்கு ஈடாகப் பல கோடி ரூபாய் பணம் செலவழித்து இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் கண்டுபிடித்துள்ள ரகங்கள் போட்டி போடவே தகுதி இல்லை என்று அங்குள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆகவே பணம் முக்கியமல்ல. தேடுதல் வேட்டைதான் இன்றைய தேவை. அரசாங்கம் வழங்கும் விதைகள் வீரியம் இழந்து வரும் சூழ்நிலையில் - இனி எதிர்காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சாரங்கிபோல் ஒரு விவசாயி தோன்றிவிட்டால் எத்தனை பஞ்சம் வந்தாலும் அதை இந்தியா தாங்கி நிற்கும். எல்லோருக்கும் எல்லாமும் வழங்கக்கூடிய இந்தியாவில் என்றுமே சோற்றுக்குப் பஞ்சம் வரும் வாய்ப்பே இராது

Monday, June 6, 2011

மரபணு மாற்றம் - இந்தியாவை மலடாக்கும் சதி


மரபணு மாற்றம் - இந்தியாவை மலடாக்கும் சதி
ஆர்.எஸ். நாராயணன்

வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்த நாம் உண்ணும் அனைத்துப் பொருள்களிலும் விஷத்தை உருவாக்கும் புதிய உயிரித்தொழில் நுட்பம் உண்மையில் மனித உயிர்களைக் கொல்லும் நுட்பமாக மாறிவருவதை இந்தியர்கள் கவனிப்பதாகத் தெரியவில்லை.

வேளாண்மையில் விஷத்தைப் பரப்பும் மரபணு மரண ஆராய்ச்சிக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்ட சூழ்நிலையில், நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகள், பருப்பு, தானியங்களில் மெல்ல மெல்ல அணுசக்தி விஷமும் கதிர்வீச்சாகப் பரவுவதை யாரேனும் கவனித்தது உண்டா?

பசுமைப்புரட்சியின் அலங்கோலத்தால் வீரிய ரக விதை, ரசாயன உரம், உயிர்க்கொல்லிப் பூச்சி மருந்துகள் காரணமாக விஷப்பரவல் மண், மனிதன், பறவை, விலங்கினம் என்று நமது உயிர்ச்சூழலே நோயுற்று அதிலிருந்து நாம் மீள்வதற்குள் மரபணு மாற்றம் என்ற அடுத்த விஷம் தயாராகிவிட்டது. ""வாழ்வதெல்லாம் வைத்தியத்துக்கே'' என்ற அவலம் நம்மைச் சூழ்ந்துவிட்டது.

மரபணு மாற்றம் என்பது பல புதிய அயல் அணுக்களைத் தோற்றுவிக்கும். பன்முகமான விஷப்பரவலைத் தோற்றுவித்து அதனால் கல்லீரல், சிறுநீரகம், கணையம், இதயம், ரத்தக்குழாய் எல்லாம் பழுதுபடும். புற்றுநோய் அபாயமும் உண்டு. பசுமைப் புரட்சி கக்கிய விஷம் நாகப்பாம்பு என்றால், மரபணு மாற்றம் விளைவிக்கும் விஷம் கட்டுவிரியன்.

இந்தியா ஏமாந்த நாடு என்பதாலும், இந்திய விஞ்ஞானிகள் பணத்துக்கு விலைபோகக் கூடியவர்கள் என்பதாலும் அமெரிக்கா இந்தியாவை மலடாக்க முனைந்துவிட்டது. இந்தியாவில் நாம் தினமும் உண்ணக்கூடிய பொருள்களில் மரபணு மாற்றம் செய்த விதைப்பயன்களின் விவரங்களை அறிந்தால் மூச்சு நின்று மூர்ச்சையாகி விடுவோம்.

இந்தியாவில் உள்ள அனைத்து வேளாண்மை ஆய்வு நிலையங்கள் மட்டுமல்ல; வேளாண்மைத் தொடர்பு இல்லாத அணுமின் ஆய்வு நிறுவனங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் போன்றவை இணைந்து யு.எஸ். உயிரித் தொழில்நுட்ப உடன்பாட்டின் அடிப்படையில் உண்ணும் பொருள்களிலும் கதிர்வீச்சைப் பாய்ச்சுகின்றன.

இந்தியாவின் மரபணு மாற்றத் தொழில்நுட்பத் தகவல் மையமான ""இக்மோரிஸ்'' வழங்கும் தகவலின்படி, மிகவும் புனிதமான ஏற்றுமதி மதிப்புள்ள ஆயுர்வேத மூலிகையான அசுவகந்தா உள்பட, அரிசி, கோதுமை, மக்காச்சோளம், துவரை, உளுந்து, கொண்டைக்கடலை, தட்டாம்பயறு, கேழ்வரகு, கம்பு, மிளகு, ஏலக்காய், பிராமி, தேயிலை, கரும்பு, சோளம், நிலக்கடலை, சோயா, கடுகு, பருத்தி, சணல், மூங்கில், ஆமணக்கு, ரப்பர், புகையிலை.... உள்ளிட்ட 74 பயிர் வகைகளில் மரபணு ஆய்வுகள் நிகழ்த்த அனுமதிக்கப்பட்டு - எந்தவிதமான பாதுகாப்பு முறையும் இல்லாமல் விஷம் பரப்பும் திட்டம் வேகமாகப் பரவி வருகிறது.

இப்படிப்பட்ட ஆய்வுகளுக்கு யார் யார் நிதி உதவி தருகிறார்கள்?

யு.எஸ். தொழில்நுட்ப உடன்பாட்டுக்கு மக்களின் வரிப்பணம் செலவாகிறது. இந்தியாவில் ஏறத்தாழ 400 ஆராய்ச்சி அமைப்புகள் எந்தவிதமான பாதுகாப்பு விதிகளையும் கையாளாமல் மரபணு மாற்றச் சோதனையில் ஈடுபடுகின்றன.

அமெரிக்காவில்கூட மரபணு ஆய்வு சோதனை வயல்கள் உகந்த பாதுகாப்பு விதிகளை மீறாமல் செயல்படுகின்றன. பல்வேறு தனியார் அமைப்புகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் பாபா அணு ஆராய்ச்சி மையம், ராணுவ ஆராய்ச்சி - வளர்ச்சி நிறுவனம், நபார்டு நிதி உதவி செய்கின்றன.

அமெரிக்கா தவிர, வேறு பல மேற்கு நாடுகளிலிருந்தும் பணம் வருகிறது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பட்ஜெட் ஒதுக்கீடு உண்டு. மத்திய அரசின் பயோ டெக்னாலஜி துறை மானியம் வழங்கி மரபணு ஆய்வை ஊக்குவிக்கிறது.

மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் எதுவெனில், இந்திய மண் முழுவதிலும் - இந்தியாவே மரபணு மாற்றம் தொடர்பான விஷப்பரீட்சையின் கூடாரமாகிவிட்டது. இந்தியாவைவிட ஏழ்மையான நாடுகளில்கூட இந்த விஷப்பரீட்சை இப்படி நிகழவில்லை.

ஏன் இந்த விஷப்பரீட்சை என்று கேட்டால், ""இந்தியாவில் இரண்டாவது பசுமைப்புரட்சிக்கு இதுவே வழி'' என்று பதில் கூறி, அவசரம் அவசரமாக எல்லா பாதுகாப்பு விதிகளையும் புறக்கணித்துவிட்டு இரண்டாவது விஷப்பரவல் தொடங்கிவிட்டது.

இரண்டாவது விஷப்பரவல் எதுவெனில், காற்று மூலம் மரபணு மாற்றப் பயிர்களின் மலர்களிலிருந்து வெளிப்படும் மகரந்தப் பொடி காற்றில் பரவாமல் இருக்க மரபணு மாற்றச் சோதனை வயல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மரபணு மாற்றம் செய்யப்படாத பயிர்களைப் பயிர் செய்து அந்த இடத்துக்கும் அப்பால் உள்ள தனியார், பொது நிலங்களில் மரபணு மாற்றத் துகள் பரவாதபடி கவனிக்க வேண்டும்.

இந்தியாவில் சுமார் 400 மரபணு மாற்றச் சோதனை வயல்கள் என்ற போர்வையில் மரபணு விஷத் துகள்களைப் பரவவிட்டு, நமது இயற்கையான பாரம்பரிய ரகங்களை முற்றிலும் அழித்துவிட்டு, இனி எந்த விதை என்றாலும் மரபணு மாற்ற விதை மட்டுமே அங்காடியில் விற்கப்பட வேண்டும் என்ற வெறித்தனம் விதை நிறுவனங்களுக்கு விலை போய்விட்ட விஞ்ஞானிகளிடம் உள்ளது.

இந்த விஷயத்தில், அதாவது இந்தியாவுக்குள் மரபணு மாற்ற விஞ்ஞானம் வரக்கூடாது என்ற கொள்கையுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளாண்மைச் சூழலியல்வாதிகளுடனும், விழிப்புணர்வுள்ள இயற்கை விவசாயிகளுடனும் அரசியல்வாதிகளும் சேர்ந்துள்ளது நல்ல திருப்பம். சிவப்புக் கொடி காட்டியவர் வேறு யாருமல்ல, பிகார் முதல்வர் நிதீஷ் குமார்தான்.

சமஷ்டிப்பூர் அருகில் உள்ள புசா நிறுவனத்தில் - இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் கிளை அமைப்புக்குரிய லிச்சிலான் தோட்டத்தில் மரபணு மாற்ற மக்காச்சோளப் பயிர் சட்டத்துக்குப் புறம்பாக நடப்பட்டிருந்ததை எதிர்த்து பிகார் அரசு மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தது.

சுமார் 600 சதுர மீட்டரில் எத்தகைய எச்சரிக்கை, பாதுகாப்பும் இல்லாமல் மரபணு மாற்றப் பயிர் சாகுபடி செய்யப்பட்டதை எதிர்த்த நிதீஷ் குமார், பிகார் மாநிலத்தில் மாநில உயிரித் தொழில்நுட்ப கூட்டுக் கமிட்டியே இல்லை என்பதால் இது சட்டவிரோதமானது - உச்ச நீதிமன்ற உதவியை நாடுவோம் என்று மத்திய அரசுக்குத் தாக்கீது அனுப்பவே, அப்போது சுற்றுச்சூழல் அமைச்சராயிருந்த ஜெய்ராம் ரமேஷ் உடனே அந்த மக்காச்சோள மரபணு மாற்றச் சோதனை வயலை அழிக்க உத்தரவிட்டார்.

மார்ச் 11-ம் தேதி விடியற்காலை டிராக்டர் மூலம் அந்த மக்காச்சோளப் பயிரை களை வெட்டுவதுபோல் வெட்டி மண்ணுக்குள் புதைத்து, உழுது, உளுந்தும் பயறும் விதைத்துவிட்டு எதுவுமே நடக்காததுபோல் விஞ்ஞானிகள் நடந்துகொண்டனர்.

உண்மையில் சோதனை வயல் எரிக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு உழவோட்டி விஷப்பயிர்களை மண்ணுக்குள் களையாக வெட்டிப் புதைத்ததையும் நிதீஷ் குமார் கண்டித்துள்ளார். விஷ மக்காச் சோளத்தை அழிக்கும்போது, மாநில விவசாயத் துறைக்குத் தகவல் தராமல் தகாத முறையில் மத்திய அரசு செயல்படுவது ஏன்?

மரபணுப் பயிர் சோதனை வயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அரசியல்வாதிகளில் முதன்மையாகத் திகழும் நிதீஷ் குமாருடன் முன்னாள் கேரள வேளாண்மை அமைச்சர் முல்லக்கார ரத்னாகரன், மத்தியப் பிரதேச விவசாய அமைச்சர் ராமகிருஷ்ண குஷ்மாரியா, ஹிமாசலப் பிரதேச அமைச்சர் பிரேம்குமார் தூமதும் கைகோத்துள்ளனர். கேரள முன்னாள் அரசு மரபணு மாற்றத் தொழில் நுட்பத்துக்கே ஒட்டுமொத்தத் தடையை விதித்துள்ளது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், அது திமுக என்றாலும் சரி, அதிமுக என்றாலும் சரி மரபணு மாற்றத் தொழில் நுட்பம் தோற்றுவிக்கும் ஆபத்தைப் பற்றிய உணர்வே இல்லை என்பதாலும், எந்த எதிர்ப்பும் காட்டாமல் மத்திய அரசின் ஆதிக்கத்தை ஏற்கும் சுயநலப் பண்பு ஓங்கியிருப்பதாலும் தமிழ்நாட்டில் மரபணு மாற்றப் பயிர்களின் சோதனை வயல்கள் பொறுப்பற்ற சில வேளாண்மை விஞ்ஞானிகளின் பிடியில் உள்ளன.

விலைபோய்விட்ட விஞ்ஞானிகளிடம் நியாயத்தை எதிர்பார்க்க இயலாது. தமிழ்நாட்டில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் மரபணு மாற்றச் சோதனை வயல்கள் உள்ளன.

என்ன எச்சரிக்கை? என்ன தற்காப்பு? யாருக்குத் தெரியும்? விஷ மகரந்தப் பரவல் வேலையைக் காண்பித்தால் பூக்கும் தாவரங்கள், தேன் எல்லாம் விஷமாகும். மலட்டு மகரந்தங்கள் மற்ற பயிர்களுக்குப் பரவி - தாய்மைப் பண்புள்ள பயிர்கள் எல்லாம் காயடித்த காளைகளாகும்.

இந்திய விவசாயம் துகிலுரியப்பட்டுவிட்டது. துகிலுரிந்தது வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள் அல்லவா?

எரிக்கப்பட வேண்டியவை மரபணு மாற்றப் பயிர் சோதனை வயல்கள் அல்லவா?

Wednesday, November 24, 2010

நமது உணவின் இயற்கைத்தன்மையை நாம் ஏன் கெடுக்கின்றோம்?

வெண்மை-மதி மயக்கும் வண்ணம்

வெள்ளைநிறம் நம்மை அதிகமாகவே சுண்டி இழுக்கிறது. வெண்நிற தோல் நம்மை அதிகம் மயக்குகிறது, அதுகூட பரவாயில்லை, சர்க்கரையில் தொடங்கி ,அரிசி,உப்பு,ரொட்டி,உடை ஏன் குளியலறை தொட்டி வரை வெள்ளைநிறத்தில் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.ரசயனங்களின் உதவியால்,இயற்கை நமக்கு வழங்கிய நன்மைகளை எல்லாம் வெளுத்துக்கட்டி வருகிறோம்

வெள்ளைச் சர்க்கரையின் கருப்புப் பக்கம்

சர்க்கரைக்கு தூய வெண்மை எப்படிக் கிடைக்கிறது? ஆசிட் சால்க்,கார்பானிக்வாயு,சல்பர்-டை-ஆக்சைட்,ஸ்ட்ரான்டியம் 
ஹைட்ராக்சைடு,மற்றும் கந்தக அமிலம் ஆகியவற்றை சர்க்கரையுடன் சேர்க்கும்போது அது வெண்மைநிறம் அடைகிறது


பெரும்பாலும் பற்சொத்தை,நீங்கள் முறையகப் பல் துலக்காததினாலோ,அல்லது அடிக்கடி பல் டாக்டரிடம் போகாததாலோ வருவதில்லை மாறாக டீ,காபி,மற்றும் இனிப்புப் பண்டங்களில் நாம் சேர்க்கும் சர்க்கரையால் வருகிறது.எப்படி?தொடர்ந்து நாம் சாப்பிடும் சர்க்கரை நமது பற்களின் காவலனான எனாமலைப் பதம் பார்த்து விடுகிறது.

“சரி விடுங்க,சீனி தான் கெட்டது, நான் ஆர்ட்டிஃபீஸியல் சுவீட்னர் எடுத்துக்கறேன்” என்று, சில அறிவாளிகள்(?) பேச்சைக் கேட்டும்,முட்டாள்ப் பெட்டி விளம்பரம் பார்த்தும் சொல்பவர்கள் நிலை, பாவம்! அவர்களது உடல், எடை குறையாதது மட்டுமல்ல,புற்றுநோய் எனும் ஆபத்தையும் சந்திக்கிறது. ஆர்ட்டிஃபீஸியல் சுவீட்னர்கள் என்பவை சிதைந்து ,புற்றுநோய்க் காரணிகளாக மாறுவதால் இப் பிரச்சினை ஏற்படுகிறது.

தினமும் டீ,காபி போன்றவற்றின்மூலம் நாம் சப்பிடும் சர்க்கரை உடலில் அமிலத்தன்மையை ஏற்படுத்துவதால்,அதைச் சரிசெய்யும் முயற்சியில் நமது உடல் மதிப்புமிக்க தாதுப்புக்களையும்,விட்டமின்களையும் இழந்து விடுகிறது.(விட்டமின் பி மூளை சரியாக இயங்க அவசியம்),விளைவு,ஈரல் போன்ற உறுப்புக்கள் பாதிப்படைகின்றன,உடல் நோயெதிர்ப்புத் திறனை இழந்து துன்புறுகிறது.

சுத்த(சத்து?)மானமாவு

இப்பொழுது,பெரிய,பெரிய கம்பெனிகளின்சுத்தமான பாக்கெட் மாவுகளுக்கு மவுசு அதிகம்,எல்லாம் விளம்பரம் படுத்தும்பாடு.(நமக்கோ தானியமாக வாங்கி அரைக்க நேரமில்லை,அந்த வேலைகளைச் செய்த பெரியவர்களையும் கிராமத்திலோ அல்லது காப்பகத்திலோ விட்டுவிட்டோம்) புஸ் என்று வரும் பூரிக்கு ஆசைப்பட்டு வாங்கும் மாவில் இயற்கையான உயிர்ச் சத்துக்களோ,அல்லது உடலுக்கு மிகவும் அவசியமான நார்ச்சத்தோ இருப்பதில்லை எல்லாம் சுத்திகரிப்பில் போய்விடுகின்றன,கம்பெனி சேர்க்கும் விட்டமினும்,மினரலும்,அமினோஆசிட்டும்,உடலால் நிராகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவதால்,உடலுக்கும் அது பெரிய வேலைப்பளு பிராண்ட் மாவைப் புழு,பூச்சிகள்கூட தின்பதில்லை,நாம்தான் விரும்பி உண்கின்றோம் சரி நமக்குத்தான் 6 அறிவாயிற்றே! இந்த வெளுத்தமாவுதான் பிஸ்ஸா, நூடுல்ஸ், பாஸ்த்தா என நாகரிக உணவாக வலம்வருகின்றது. ,நாகரிகத்தின் விலை-மலச்சிக்கல், உடல் பருமன்,சர்க்கரை வியாதி,ரத்தக்கொதிப்பு


அ(ய்)யோடைசுடு(?)உப்பு


உப்பையும் வெளுத்து வெள்ளையக்கி அதோடு அயோடினையும் சேர்த்து,அரசின் துணையோடு மூளைக்கு நல்லது,தைராய்டுக்கு நல்லது என விற்கிறார்கள், உண்மையில் அந்த உப்பு 90% சோடியமாக உள்ளது இந்த அதீத சோடியம்தான் உயர் ரத்த அழுத்தம்,பார்வைக்கோளாறு,தோல்வியாதி அகியவற்றுக்குக் காரணமாக உள்ளது.

சாதாரண உப்பில்,பொட்டாசியம்,மக்னீசியம்,துத்தநாகம் என உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன அ(ய்)யோடைசுடு(?)உப்பைத் தின்றால் உங்களுக்கு புற்றுநோய்வரும் சாத்தியம் உள்ளது.தேவைப்படும் அயோடின் இயற்கை உணவிலேயே உள்ளது 


சுத்திகரிக்கப்பட்ட எண்ணை


கண்ணாடிபோலப் பார்க்க பளிச்சென்று நறுமணத்தோடு இருக்கும் எண்ணை, அதனை கொதிக்க வைத்து, வடிகட்டி, ரசாயனங்களோடு கலந்து வடித்தபின்தான் நமக்குக் கிடைக்கிறது.அதில் வரவு-ரசாயனங்கள்,செயற்கை நறுமணப் பொருட்கள்,தேவையற்ற கொழுப்பு. விரையம் - இயற்கையான சத்துக்கள்,வைட்டமின்கள்,மணம்,ஆரோக்கியம்


வெள்ளைச் சன்ன அரிசி

(அரிசி)"உண்டு கெட்டனர் தமிழர்" என சில அறிவியலறிஞர்களும்,ஆங்கிலமருத்துவர்களும் சொல்லக் கேட்டிருப்போம், உண்மையில் தவறு அரிசியிடமோ அல்லது அதை உணவாகக் கண்டுபிடித்த நம் முன்னோர்களிடமோ இல்லை, கலப்பினம் என அதில் கலப்படம் செய்து, நவீன ஆலையில் விட்டுத் தீட்டு,தீட்டு எனத்தீட்டி,பலப்பல பொடிகள் ரசாயனங்கள் கலந்து வெள்ளையக்கி பிராண்டரிசி எனப் பெயறிட்ட நம்மிடம்தான் உள்ளது

இனக்கலப்பால் மருத்துவ குணங்களும்,தீட்டியதால் நன்மைதரும் நார்ச்சத்து,உயிர்ச்சத்து,விட்டமின்கள் பொன்றவையும் தொலைந்து மீந்தது மாவு மட்டும்தான்.நோய் வராமல் என்ன செய்யும்.


சரி, என்னதான் தீர்வு, மதி மயக்கத்தையும்,வீன் ஆடம்பரத்தையும் விட்டுவிட்டு இயற்கைக்கு நெருக்கமாக வந்தால் தீர்வு நம் கண் முன்னே,ஆம் டீ,காபியைத் தவிர்க்கலாம் முடியாவிட்டால் குறைக்கலாம், அதுவும் முடியவில்லையா? சர்க்கரை வேண்டாம், கருப்பட்டி போடுங்க. செக்கு எண்ணையை வாங்குங்க,பாமயிலுக்குபதில்,நல்லெண்ணை,தேங்காய் எண்ணை என்று பயன் படுத்துங்க, தீட்டாத நம் பாரம்பரியரக அரிசிய கேட்டுவங்குங்க அதுவும் இயற்கையில் விளைந்ததா இருக்கட்டும்.விளம்பரம் பார்த்து மயங்காதீங்க. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

அரிசி உணவு ஆரோக்கியமானதா?

இன்று அரிசிஉணவு ஆபத்தானதாகவும் சர்க்கரைநோய்,உடல்பருமன் ஆகியவை அரிசி உணவால் வருவதாகப் பேசப்படுகிறது, இது எந்தஅளவு உண்மை?

அரிசி உலகின் மிகவும் பழமையான தானியமாகும்,அரிசியைப்பற்றிய குறிப்புகள் வேதங்களிலும்,பண்டைத்தமிழ் இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.நெற்பயிர் இந்தியாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியதாக நம்பப்படுகிறது தமிழ்நாட்டு மக்களின் சடங்குகளிலும் அரிசி முக்கியப் பங்கு வகிக்கிறது.பன்னெடுங்காலமாக நமது முக்கிய உணவுதானியமாக அரிசி விளங்கி வருகிறது.

வேதகாலத்தில் இந்தியாவில் சுமார் 4,00,000 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன,இவை உடலுக்கு நன்மைதரக்கூடிய பலவிதமான மருத்துவகுணங்களைக் கொண்டதாக இருந்தன. இன்றும் நீலஞ்சம்பா,குழியடிச்சான் போன்றவை தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கவும்,சீரகச்சம்பா வாதத்தைப் போக்கவும்,யானைக்கால் மற்றும் மூல வியாதிக்கு கருங்குறுவை எனும் ரகமும் பயன்படுத்தப்படுகின்றன

அரிசியில் உள்ள சத்துக்கள் 




அரிசி வகைபுரதம் (g/100g)இரும்பு (mg/100g)துத்தநாகம் (mg/100g)நார்ச்சத்து (g/100g)
தீட்டப்பட்ட அரிசி(வெள்ளை)6.81.20.50.6
கைக்குத்தல் அரிசி7.92.20.52.8
சிகப்பு அரிசி7.05.53.32.0
காரரிசி8.53.5
4.9












அரிசி(1/4 Cup)ஆற்றல் (kcal)மாவுச்சத்து(g)கொழுப்பு (g)நார்ச்சத்து(g)புரதம்(g)
 அரிசி16936.980.310.603.30
புழுங்கல் அரிசி17237.800.260.793.14
கைக்குத்தல் அரிசி17135.721.351.623.64



அரிசி பல்லாயிரம் ஆண்டுகளாக நமது உடலுக்குப் பழக்கப்பட்ட உணவு, மேலும் அரிசியில் உள்ள சத்துக்கள் எளிதில் ஜீரணமாகி உடலுக்குக் கிடைக்கின்றன.அரிசியின் அளவுக்கு எளிமையான சத்துக்கள்நிறைந்த தானியம் எதுவுமே இல்லை.மேலும் நமது தமிழகத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ற உணவு அரிசிதான்,அதைவிடுத்து வடநாட்டிலும்,மேல்நாட்டிலும் விளையக்கூடிய கோதுமை,ஓட்ஸ் போன்ற தானியங்களை ஆரோக்கியம் எனும்பெயரில் சாப்பிடுவது புதுப்புது சிரமங்களைத்தான் கொண்டுவரும் ஏனென்றால் அவை அனைத்தும் நம் உடலைப்பொருத்த அளவில் பரிச்சையமில்லாத புதிய ஊடுருவல்க்காரர்கள்தான்,எனவே உடலுக்குள் இவை சென்றதும் உடல் கலவரமடைந்து எதிர்ச்செயல்புரியத் தொடங்குகிறது அதுவே உடல் தொந்தரவுகளுக்கு வழி வகுக்கிறது நம் நிலை கொதிக்கும் எண்ணைக்கு பயந்து எரியும் அடுப்பில் குதித்த கதையாகிறது, வேறு என்னதான் வழி?

ஆயிரமாயிரம் ஆண்டுகள் நமது முன்னோர்களால் உண்ணப்பட்டு, ஜீன்கள் மூலம் இதுதான் நல்ல உணவு என நமது உடலுக்கும் உணர்த்தப்பட்ட பரம்பரிய ரகங்களை விட்டுவிட்டு,உயர் விளைச்சல் ரகங்கள் என வெளிநாட்டு கலப்பு இனங்களைப் பயன் படுத்தியதும்,விஷத்தைக் கொட்டி விவசாயம் செய்தது மாபெரும் தவறு,போதாதற்கு வியாபாரிகள் அரிசிக்கும் கவர்ச்சி வேண்டும் என்று ஆடைக்குறைப்பும் செய்துவிட்டனர்(அதுதானுங்க சில்க் பாலிஷ்).நாம் என்ன செய்தோம்,கவர்ச்சியில் மயங்கி நன்றாகப் பாலிஷ் செய்த மிகச்சன்னரக அரிசியாகக் கேட்டு வாங்கிப் பயன் படுத்தினோம்,விளைவு உடல் புதுரகங்களைக் கண்டு பயந்தது,பசுமைப் புரட்சி ரசாயனங்கள், உடலில் விஷத்தைச் சேர்த்தன,வியாபாரி செய்த பாலிஷும்,நாம் விரும்பிய சன்னவடிவமும் சேர்ந்து உடல் உறுப்புகளைக் குழப்பின,அதையும்விட நமது வாழ்க்கைமுறையில் உடல் உழைப்பைத் தவிர்த்தது,கண்டதைத் தின்பது,உடற்பயிற்சி இல்லாதது,ஆசை,என பலவற்றின் விளைவு ......வியாதி

பாரம்பரிய ரகங்கள் சிறிது குண்டாக இருந்தாலும் குறைந்த GI (Glycemic index) எண் கொண்டவை,மேலும் அவற்றின் மருத்துவ குணமும்,தீட்டப்படாத(பாலிஷ் செய்யப்படாத) அரிசியின் மேல் உறையில் உள்ள வைட்டமின்கள்,தாதுப்புக்கள்,அமினோ அமிலங்கள்,மற்றும் நல்லகொழுப்பு போன்றவை உடல் ஆரோக்கியமாக நோயில்லாமல் இருக்க மிகவும் உதவுகின்றன

இனிமேலும் "அரிசிச் சோற்றைத் தின்று தின்று சர்க்கரை வந்தது" என்றோ, "அடடே எந்தக்கடை அரிசி, இம்புட்டு குண்டாயிட்டே" என்றோ பழி போடாமல்,நஞ்சில்லா வேளாண்மையில் விளைந்த,பாரம்பரிய ரகங்களை வாங்கி சாப்பிடுங்க,அதுவும் பாலிஷ் போடாததாக இருக்கட்டும்.அப்புறம்பாருங்க உங்க சாப்பாடும் அமிர்தம்தான்

சர்க்கரைவியாதியும் பூச்சிக் கொல்லி(!) மருந்துகளும்

பொதுவாக சர்க்கரை நோய்பற்றிய அனைத்து விவாதங்களிலும் தவறாமல் இடம்பெறுபவை மரபுப் பண்பு, மனஇறுக்கம் மற்றும் உடல் பருமன். இப்பொழுது இதில் நாம் (யார்? விஞ்ஞானிகளா!) எதிர் பாராத ஒன்றையும் சேர்க்கவேண்டி உள்ளது,அவை எளிதில் சிதையாத அங்கக மாசுகள் (வேறோன்றுமல்ல நமது பூச்சிக் கொல்லி(!) மருந்துகள்தான்) ஆகும். அவை மனிதன் மற்றும் விலங்குகளின் உடல் திசுக்களில் சேர்ந்து உயிரியல் செரிவும்உணவுச்சங்கிலியில் உயிரிவழிப் பெருக்கமும் அடைகின்றன. இது சர்க்கரைவியாதியைக் கட்டுப்படுத்தவும்,தவிர்க்கவும் நாம் எடுக்கும் முயற்சிக்ளுக்குச் சுற்றுச் சூழல் எனும் புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது.

கோவையைச் சேர்ந்த PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனமும்,அமெரிக்க மின்னசோட்டா பல்கலைக் கழகமும் இணைந்து சுமார் 12 விதமான, சர்க்கரைவியாதியை ஏற்படுத்தும் அழியா அங்ககமாசுக்களைக் கண்டறிந்துள்ளனர் DDT, ஆல்ரின், குளோர்டேன், என்ரின்ஹெபடகுளோர், ஹெஃஸாகுளோர் போன்ற பல பூச்சி மருந்துகள் நமது சுரப்பிகளைப்பாதித்து ஹார்மோன்களின் செயல்பாடுகளைப் பாதிக்கின்றன என்று மின்னசோட்டா பல்கலைக் கழக பேராசிரியர் வில்லியம் A டோஸ்கனொ சொல்கிறார்.

மேலும் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட பல பூச்சிமருந்துகள் இங்கு தாராளமாகப் பயன்படுத்த்ப்ப்டுவதாக அவர் வருத்தம் தெரிவிக்கிறார்
நஞ்சில்லா வேளாண்மையே நோயற்ற வாழ்வுக்கு வழி. மருந்தடித்து, யூரியா, டி.ஏ.பி,பொட்டாஷ், நுண்ணூடமெல்லாம் போட்டு காசு சேத்தினா…நல்லவாயன் சம்பாதித்து (விவசாயி?) நாறவாயன் (ஆஸ்பத்திரி!) தின்னகதை ஆயிடுமோ? என்னமோபோங்க!

இயற்கை வேளாண்மை – முக்கிய கோட்பாடுகளும் , செயல்பாடுகளும்


நன்றி
இயற்கை வேளாண்மையின் முக்கிய கோட்பாடுகள்
பன்னாட்டு அளவிலான இயற்கை வேளாண்மை இயக்கம் (International federation for organic agriculture movement) இயற்கை வேளாண்மையை, கீழ்க்கண்ட முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது.
1. ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு 
இயற்கை வேளாண்மையானது மண், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் நலத்தினை மொத்தமாக கணக்கில் கொண்டு அவற்றை நீடித்த நிலைத்த முறையில் மேம்படுத்தும் வகையில் செயல்படவேண்டும்.
2. உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு
காணப்படும் உயிர்ச்சூழல் நிலைகளின் முறைகள் மற்றும் சுழற்சிக்கேற்ப இயற்கை வேளாண்மை இயைந்து செயல்பட்டு, சுற்றுப்புறசூழலின் வாழ்வியலுக்கு உதவிட வேண்டும்
3. நடுநிலையாக செயல்படுதல் பற்றிய கோட்பாடு
வாழ்வியல் வாய்ப்புகளுக்கேற்பவும், பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் அவற்றுடன் இயற்கை வேளாண்மை உறவுகளை ஏற்படுத்தி நடுநிலையாக செயல்படவேண்டும்.
4. பராமரிப்பு பற்றிய கோட்பாடு
தற்பொழுது வாழும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் ஏற்றவாறு இயற்கை வேளாண்மை கவனமான மற்றும் பொறுப்பான முறையில் செயல்படவேண்டும்.
மேற்கூறப்பட்ட கோட்பாடுகள் அனைத்தும் ஒருசேர கடைபிடிக்கப்படவேண்டும்.

இயற்கை வேளாண்மையின் முக்கியமான குணங்கள்
  • ஒரு பகுதியில் கிடைக்கும் புதுப்பிக்கவல்ல மூலாதாரங்களை உபயோகப்படுத்துதல்
  • உயிராதாரங்களின் உற்பத்தித் திறன் மற்றும் சூரிய ஒளியினை முறையாகப் பயன்படுத்துதல்
  • மண்ணின் வளத்தினை பராமரித்தல்
  • தாவர மற்றும் கரிம சத்துகளை அதிகபட்சமாக மறுசுழற்சி செய்தல்
  • இயற்கைக்கு மாறான பொருட்களையோ அல்லது உயிரினங்களையோ உபயோகப்படுத்தாமல் இருத்தல் (உதாரணமாக வேதியில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை உபயோகித்தல்)
  • விவசாய நில உபயோகம் மற்றும் உற்பத்தி முறையில் பல்லுயிர் பெருக்க முறைகளை உபயோகித்தல்
  • பண்ணை விலங்குகளை அவற்றின் சுற்றுப்புற வேலைகளுக்கேற்ப அவற்றினை பராமரித்தல் மற்றும் அவற்றின் இயற்கையான குணநலன்களை அனுமதித்தல்
இயற்கை வேளாண்மையானது சுற்றுப்புற சூழ்நிலையுடன் இயைந்த உற்பத்தி முறையாகும். இம்முறை வேளாண்மையானது சிறிய விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை தரவல்லது. இயற்கை வேளாண்மை மூலம் வறுமையினை ஒழிக்கவும், உணவுப்பாதுகாப்பினையும் கீழ்க்கண்ட செயல்முறைகளின் மூலம் உதவுகிறது.
  • குறைந்த வேளாண் இடுபொருள் உபயோகப்படுத்தும் இடங்களில் விளைச்சலை அதிகப்படுத்துதல்
  • புவியில் வாழும் பல்வேறு உயிர்களை பாதுகாக்கவும், பண்ணையிலுள்ள மற்றும் அதனை சுற்றியுள்ள இயற்கை மூலாதாரங்களை பாதுகாத்தல்
  • உற்பத்தி செலவினை குறைத்து வருமானத்தினை அதிகப்படுத்துதல்
  • பாதுகாப்பான, பல்வேறு விதமான உணவுகளை உற்பத்தி செய்தல்
  • நீண்ட நாட்களுக்கு வேளாண் உற்பத்தியினை பராமரித்தல்


இயற்கை மேலாண்மை- ஒரு ஒருங்கிணைந்த செயல்முறை
தத்துவம்
  • இயற்கை வேளாண்மை பண்ணையிலுள்ள அனைத்து உற்பத்தி முறைகளும் ஒன்றோடொன்று இணைத்து, ஒரு உற்பத்தி முறைக்கு மற்ற உற்பத்தி முறை உதவும்  வகையில்  செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த முறையாகும்.
  • பயிர்களின் சத்தின் ஆதாரமாகவும், பல்வேறுபட்ட உயிராதாரங்களின் மூலம் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், சுழல் முறையில் பயிரிடுதல், பல்வேறு பயிர்களை ஒருசேர  பயிரிடுவதன் மூலம் மண்ணின் வளத்தினை பாதுகாத்தல், மாடுகளின் மூலம் பண்ணையிலுள்ள ஆதாரங்கள் மேலாண்மை மற்றும் உற்பத்தியினை அதிகப்படுத்துதல் போன்ற அனைத்திற்கும் நலமான உயிர் ஓட்டமுள்ள மண் அவசியம்.
  • இயற்கை முறை மேலாண்மையின் மூலம் தேவைக்கு அதிகமாக மூலாதாரங்களை பயன்படுத்தி அதிக விளைச்சலை ஏற்படுத்தாமல், தேவைக்கேற்ப மூலதாரங்களை உபயோகித்து உற்பத்தியினை பெருக்குவதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை மூலாதாரங்களை சேமித்து வைத்தல்


முக்கியமான படிகள்
  • மண்வளத்தினை அதிகப்படுத்துதல்
  • வெப்பநிலையினை மேலாண்மை செய்தல்
  • மழைநீரை சேமித்தல்
  • சூரிய ஆற்றலை அதிகபட்சமாக சேமித்தல்
  • இடுபொருட்கள் தேவை பூர்த்தி செயவதில் தன்னிறைவு
  • இயற்கை சுழற்சி முறைகள் மற்றும் உயிர்வாழ் முறைகளை பராமரித்தல்
  • விலங்குகளை ஒருங்கிணைத்தல்
  • புதுப்பிக்கவல்ல ஆற்றல்களை அதிகமாக சார்ந்திருத்தல் (உதாரணமாக விலங்கின ஆற்றல்)


எப்படி அடைவது
1. மண்வளத்தினை அதிகப்படுத்துதல்
வேதியியல் பொருட்களை வேளாண் உற்பத்திக்கு உபயோகப்படுத்தாமல் இருத்தல், பயிர் உப பொருட்களை உபயோகப்படுத்துதல், கரிம மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்துதல், பயிற்சுழற்சி முறை மற்றும் பல்வேறு பயிர்களை பயிரிடுதல்,  அதிகமாக மண்ணினை தோண்டாமல், மண்ணின் மீது பசுந்தாழ் உரங்கள் மற்றும் உயிர் பொருட்களை இடுதல்
2. வெப்பநிலை மேலாண்மை செய்தல்
மண்ணின் மீது பசுந்தாழ் உரங்களை போட்டு மூடி வைத்தல் மற்றும் வரப்புகளில் மரங்கள் மற்றும் புதர் வகை தாவரங்களை நடுதல்
3மண் மற்றும் மழைநீரினை சேகரித்தல்
மழைநீரினை சேகரிக்க சேகரிப்பு தொட்டிகளை கட்டுதல், சரிவான நிலங்களில் மழை நீரினை சேகரிக்க வரப்பு போன்ற அமைப்புகளை நிறுவதல், சரிவான இடங்களில் வரிசையாக மரங்களை நடுதல், பண்ணைக்குட்டைகளை தோண்டுதல், குறைந்த உயரமுடைய செடிகளை வரப்புகளில் நடுதல்
4. சூரிய ஆற்றலை சேகரித்தல்
பல்வேறு வகை பயிர்களை நடுவதன் மூலம் வருடம் முழுவதும் பசுமையினை வயல்களில் பராமரித்தல்
5. இடுபொருட்கள் தேவை பூர்த்தி செயவதில் தன்னிறைவு 
  
உற்பத்தி செய்த விதைகளை உபயோகித்தல், பண்ணையிலேயே உரத்தினை உற்பத்தி செய்தல், மண்புழு உரம், திரவ உரம், தாவர கழிவுகளை உபயோகித்தல்
6. உயிராதாரங்களை பராமரித்தல்   
உயிரினங்கள் வாழ்வதற்கு போதுமான, தகுந்த வாழ்விடங்களை உருவாக்குதல், பூச்சிக்கொல்லிகளை எப்பொழுதும் உபயோகிக்காமல் இருத்தல், பல்வேறு பட்ட உயிரனங்களை பெருக்குதல்
7. விலங்குகளை ஒருங்கிணைத்தல்
இயற்கை வேளாண்மையின் மிக முக்கியமான அம்சம் கால்நடைகளாகும். இவை அவற்றின் உற்பத்தி பொருட்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல், சாணம், மற்றும் சிறுநீர் போன்ற மண் உரங்களையும் அளிக்கின்றன.
8. புதுப்பிக்கவல்ல ஆற்றலை உபயோகித்தல்
சூரிய ஆற்றல், சாண எரிவாயு, காளைகளின் மூலம் நீர் இறைக்கும் பம்புகள், ஜெனரேட்டர் மற்ற இதர இயந்திரங்களை உபயோகித்தல்.

இயற்கை வேளாண் பண்ணையினை உருவாக்குதல்
இயற்கை முறை வேளாண்மை மேலாண்மை ஒரு ஒருங்கிணைந்த முறையாகும். சில இயற்கை வேளாண்மை வழி முறைகளை பின்பற்றினால் மட்டும் குறிப்பிடத்தக்க விளைச்சலை பெற இயலாது. வேளாண் உற்பத்தியினை அதிகரிக்க தேவையான எல்லா அம்சங்களும் முறையாக செயல்படுத்தப்படவேண்டும். இந்த வழிமுறைகளாவன. 1.வாழ்விடத்தினை உருவாக்குதல் 2. வேளாண் இடுபொருட்களை தயாரிக்க பண்ணையில் வசதிகளை ஏற்படுத்திடல் 3. பயிற்சுழற்சி மற்றும் பல பயிர் சாகுபடிக்கு திட்டமிடுதல் 4. 3-4 வருட அளவிலான பயிற்சுழற்சி முறை 5. புவி அமைப்பு, மண், சீதோஷ்ண நிலைக்கேற்றவாறு பயிரிடுதல்

i. உள்கட்டமைப்பு
  • பண்ணையில் 3-5% சதவிகித இடத்தினை, மாடுகள், மண்புழு உரத்தயாரிப்பு, உர உற்பத்தி கிடங்கு, போன்றவற்றிற்கேற்றவாறு ஒதுக்கிடவேண்டும்
  • மழைநீரினை சேமிக்க, 7X3X3 மீட்டர் அளவிற்கு குழிகளை வெட்டி மழைநீரினை சேகரிக்க வேண்டும். இவ்வாறான குழிகளை ஒரு ஹெக்டேருக்கு ஒரு குழி என்ற விகிதத்தில் சறுக்கலாக அதிக மழைநீர் சேகரிக்கும் இடங்களில் தோண்டவும்.
  • முடியுமானால், 20 மீட்டருக்கு 10 மீட்டர் என்ற அளவிலான பண்ணைக்குட்டையினை நிறுவலாம்
  • திரவ உரத்தினை தயாரிக்க ஒரு ஏக்கருக்கு ஒரு 200 லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டியினை நிறுவ வேண்டும். மற்றும் சில தொட்டிகள் தாவர கழிவுகளை போடுவதற்கும் நிறுவ வேண்டும்.
  • 5 ஏக்கர் அளவுள்ள நிலத்திற்கு 1-2 மண்புழு தயாரிப்பு படுக்கைகள், NADEP  கம்போஸ்ட் தொட்டி, 2-3 உரத்தொட்டிகள் போன்றவற்றை நிறுவ வேண்டும்.
  • இவ்விடங்களில், தண்ணீர் பாய்ச்ச கிணறு மற்றும் பம்ப் போன்றவற்றையும் நிறுவலாம்.

ii. வாழ்விடம்
  • கிளைரிசிடியா, மர அகத்தி, சுபாபுல், கேசியா டோரா மற்றும் இதர மண்ணில் உயிர் நைட்ரஜன் தக்க செய்யும் மரங்களை வரப்புகளில் நடவ வேண்டும் (5 ஏக்கர் நில அளவுள்ள பண்ணைக்கு, 1.5 மீட்டர் அகலத்திற்கு, 800-1000மீ நீலம் அளவுக்கு மர வளர்ப்பு தேவை)
  • சில இடங்களில் கீழ்க்கண்ட மரங்கள் அல்லது புதர்செடிகளை நட வேண்டும். எடுத்துக்காட்டாக, வேம்பு -3-4 மரங்கள், புளிய மரம் –ஒன்று, அத்தி மரம் 1-2, இலந்தை புதர்கள் 8-10, நெல்லி -1-2, சீதாப்பழ மரம் அல்லது முருங்கை 2-3 மற்றும் 2-3 பழ மரங்கள்
  • கிளைரிசிடியா மர வரிசைகளுக்கு இடையில் பூச்சிக்கொல்லித்திறன் வாய்ந்த அடொதோடா, நொச்சி, எருக்கு, நெய்வேலி காட்டமணி, ஊமத்தை போன்ற தாவரங்களை நடவும்.
  • பொது உபயோக இடத்திலுள்ள மரங்களை முழுவதும் வளர்வதற்கு அனுமதிக்கவேண்டும். பண்ணை வரப்பிலுள்ள மரங்களையும், புதர் செடிகளையும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு நடுதல் வேண்டும். பின்பு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை வெட்டிவிட வேண்டும்.
  • கிளைரிசிடியா மரக்கன்றுகளை பெரிய வரப்புகளில் நெருக்கமாக பண்ணையினை சுற்றிலும் நடவேண்டும். இவை உயிர் வேலியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மண்ணில் நைட்ரஜன் சத்தினை நிலைநிறுத்தவும் பயன்படுகின்றன.
  •  400 மீட்டர் நீளமுள்ள கிளைரிசிடியா செடிகள், மானாவாரி சூழ்நிலையில், நட்ட மூன்றாம் வருடத்திற்கு பின்பு ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 22.5 கிலோ நைட்ரஜனை ஒரு வருடத்திற்கு தரவல்லது. நட்ட 7 வருடத்திற்கு பின்பு, ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 77 கிலோ நைட்ரஜனைத் தரவல்லவை. நீர்பாய்ச்சும் நிலங்களில் இந்த நைட்ரஜன் அளவு 75-100 சதவிகிதம் அதிகரிக்கும். நீர் பாய்ச்சும் தருணங்களில் வருடத்திற்கு 3-4 முறையும், நீர் பாய்ச்சாத தருணங்களில் 2 முறையும் அறுவடை செய்யலாம். கிளைரிசிடியா செடிகளை 5.5 அடி உயரத்திற்கு மேல் வளரவிடக் கூடாது, ஏனெனில் இந்த உயரத்திற்கு மேல் அவை வளர்ந்தால் நிலத்தில் நிழல் அதிகம் விழும். இதன் இலைகளை பசுந்தாழ் இலை உரமாக பயன்படுத்தலாம் இவற்றை அறுவடை செய்து மண்ணுடன் கலந்து விதை விதைப்பதற்கு முன்பு உரமாக பயன்படுத்தலாம்

இயற்கை வேளாண்மைக்கு மண்ணை தயாரித்தல்
அ. குறைந்த இடுபொருளுக்கான மாற்று வழிமுறை
அ. குறைந்த இடுபொருளுக்கான மாற்று வழிமுறை (Low input alternative)
  • முதல் வருடத்தில், ஒரே சமயத்தில் பல்வேறு வயதுடைய பயறு வகை பயிர்களை - அதாவது, முதல் 60 நாட்கள் பயிர், பின் 90-120 நாட்கள் பயிர், பின்பு 120 நாட்கள் பயிர் ஆகியவற்றை,  வரிசையாக பயிரிடலாம். தானியங்களை/பச்சை காய்களை உருவி எடுத்து விட்டு, பின் எல்லா செடிகளையும் களைச்செடிகளுடன் சேர்த்து பசுந்தாழ் உரமாகப் பயன்படுத்தலாம்.
  • இரண்டாம் பருவத்தில் ஒரு ஹெக்டேருக்கு 2.5 டன் என்ற விகிதத்தில் இயற்கை உரத்தினை நிலத்தில் இடவும். பின்பு தானியங்களுடன் பயறு வகைகளையும் ஒன்றாக, ஊடுபயிர் அல்லது தொடர் பயிராகவோ பயிரிடலாம். அறுவடைக்குப்பின் இந்த செடிகளை பசுந்தாழ் உரமாகப் பயன்படுத்த வேண்டும்
  • தண்ணீர் பாய்ச்சும் வசதிகள் இருந்தால் வெயில் காலத்தில் வளரும் பயறு வகை பயிரினை, காய்கறிகளுடன் சேர்த்து பயரிடலாம். அறுவடைக்கு பின்பு இந்த இரண்டு செடிகளையும் சேர்த்து பசுந்தாழ் உரமாகப் பயன்படுத்தலாம்.
  • ஒவ்வொரு பயிரிடும் தருணத்திலும் திரவ உரத்தினை வயல்களில் 3-4 முறை இடவும்
ஆ. அதிக இடுபொருளுக்கான மாற்று முறை  
  • மண்ணில் 2.5 டன் தொழுஉரம் அல்லது மண்புழு உரம், 500 கிலோ எண்ணெய் பிண்ணாக்கு, 500 கிலோ ராக் பாஸ்பேட், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 5 கிலோ பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் போன்றவற்றை இடவும்
  • 3-4 வகையான வேறுபட்ட பயிர்களை வரிசையாக விதைக்கவும். இதில் 40 சதவிகிதம் பயறு வகைகளாக இருக்கவேண்டும். அறுவடைக்குப்பின் அடுத்த விதைப்புக்கு முன் எல்லா செடிகளையும் பசுந்தாழ் உரமாக பயன்படுத்தவும். இரண்டாம் விதைப்பு பருவத்திலும் இதே போன்று உரங்களைப் பயன்படுத்தவும்
  • திரவ உரத்தினை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவுக்கு 3-4 முறை பயிரிடும் தருணத்தில் நீருடன் கலந்து வயல்களுக்குப் பாய்ச்சவும்.
12-18 மாதங்களுக்குப் பிறகு இந்த மண் இயற்கை முறை வேளாண்மைக்கு எந்த பயிர்களையும் இணைத்து பயிரிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். அடுத்த 2-3 வருடங்களுக்கு எந்த பயிரிடுடனும் பயறு வகைப் பயிர்களை ஊடு பயிராகவோ அல்லது இணைப்பயிராகவோ பயிரிடலாம். பயறு வகைப் பயிர்களுக்கு குறைந்தது 30 சதவிகிதம் வரை பயிர்க்கழிவுகளாக இருக்கமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். பின்பு இப்பயிர்க்கழிவுகளுடன் திரவ உரத்தினை சேர்த்து அடி உரமாக மண்ணில் இடலாம்.

iv. பலவகையான பயிர்களை பயிரிடுதல் அல்லது சுழற்சி முறையில் பயிரிடுதல்
  • இயற்கை முறை வேளாண்மையில், ஒரு தனிப்பட்ட பயிர் பயிரிடும் முறை பயன்படுத்தப்படமாட்டாது.
  • முழுப்பண்ணையிலும் 8-10 பயிர்கள் எல்லா சமயத்திலும் கண்டிப்பாக பயிரிடப்பட்டிருக்கவேண்டும்
  • ஒவ்வொரு வயலிலும் குறைந்தது 2-4 வகையிலான பயிர்கள் பயிரிடப்பட்டிருக்கவேண்டும். அவற்றுள் ஒன்று கட்டாயாமாக பயறு வகை தாவரமாக இருக்கவேண்டும்
  • சில சமயத்தில் ஒரு வயலில் ஒரு விதமான பயிர் மட்டுமே பயிரிடப்பட்டு இருப்பின், அடுத்த வயலில் வெவ்வேறு விதமான பயிர்களை பயிரிடவேண்டும்
  • மூன்று அல்லது நான்கு வருட பயிற்சுழற்சி முறையினை பின்பற்ற வேண்டும்
  • அதிக சத்துகள் தேவைப்படும் தாவரத்திற்கு முதலில் பயிரிட்டு பின்பு பயறு வகை பயிர்களை பயிரிடவேண்டும்.
  • பல்வேறு விதமான தாவரங்களைப் பயிரிடுவதற்கும், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும், 50-150 காய்கறி செடிகளை தோராயமாக வீட்டு உபயோகத்திற்காகவும், கேந்தி  எனப்படும் துளுக்க சாமந் தி செடிகளை நூறு செடிகள் ஒரு ஏக்கருக்கு என்ற விகிதத்திலும் பயிரடவேண்டும்.
  • பயறு வகை மற்றும் காய்கறி பயிர்களுடன் அதிக சத்துகள் தேவைப்படும் கரும்பு போன்ற பயிர்களையும் போதுமான உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.

v. 5. உயிருள்ள அதிக சத்து மிகுந்த இயற்கை மண்
  • வளமுள்ள, உயிர்ச்சத்து மிகுந்த மண்ணில் கரிம கார்பனின் அளவு, குறைந்தது 0.8-1.5% சதவிகிதம் இருக்கவேண்டும்
  • நுண்ணிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்ளின் உபயோகத்திற்காக எந்த சமயத்திலும் போதுமான அளவு உலர்ந்த, பாதி மக்கிய அல்லது முழுவதும் மக்கிய கரிமபொருள் மண்ணில் இருக்கவேண்டும்
  • ஒரு கிராம் மண்ணில் 1 x 108 என்ற எண்ணிக்கையில் நுண்ணுயிர்களான பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஆக்டினோமைசிட்டிஸ் போன்றவை கட்டாயமாக இருக்கவேண்டும்
  • சிறிய உயிரனங்களும், பூச்சிகளும், எறும்புகளும் கட்டாயமாக போதுமான எண்ணிக்கையில் இருக்கவேண்டும்

vi. மண்ணில் உரமிடுதல் மற்றும் மண்ணை வளப்படுத்துதல்
  • கிளைரிசிடியா மற்றும் இதர வரப்புகளில் வளர்த்தப்பட்ட மரங்களின் கிளைகள், பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட தொழுஉரம், மண்புழு உரம், சாணம் மற்றும் சிறுநீர், பயிர்க்கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி மண்ணின் சத்தினை அதிகப்படுத்தலாம்
  • உயிர்உரங்கள் மற்றும் அடர்த்தியான உரங்களான தூளாக்கப்பட்ட எண்ணெய் பிண்ணாக்குகள், கோழி எரு, காய்கறிகழிவுகள், மற்ற இதர தயாரிக்கப்பட்ட உரங்களை தகுந்த விகிதத்தில் கலந்து போதுமான அளவுகளில் உபயோகிக்கவேண்டும்
  • அதிக அளவிலான தொழுஉரத்தினை உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும்
  • பயிற்சுழற்சி முறையினை மாற்றியமைத்தல், பல்வேறு விதமான பயிர்களைப் பயிரிடுதல் போன்ற யுக்திகளைப் பயன்படுத்தி இடுபொருட்களை நன்றாக உபயோகப்படுத்தவேண்டும்
  • பயிரின் வகை மற்றும் பயிருக்குத் தேவைப்படும் சத்துகளின் தேவைக்கேற்ப பண்ணையின் வெளியில் இருந்து வாங்கி உபயோகப்படுத்தப்படும் இடுபொருட்களின் தேவையினை அறியலாம்
  • மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் மற்றும் இதர உயிர்ப்பொருட்களின் செயல்திறனை பராமரிக்க திரவ உரங்களை மண்ணில் இடுவது அவசியமாகும். எல்லா விதமான பயிர்களுக்கும் 3-4 முறை திரவ உரத்தினை இடலாம்
  • மண்புழு உரம், கம்போஸ்ட் டீ, மாட்டின் சிறுநீர் போன்றவை தெளிப்பாக உபயோகப்படுத்தப்படும் போது பயிர்களின் வளர்ச்சியினை அதிகரிக்கும் தன்மையுடையவை. பயிரினை விதைத்து 25-30 நாட்கள் கழித்து 3-5 முறை இவற்றை தெளிப்பதால் பயிர் உற்பத்தி அதிகரிக்கும்.
  • வெரிமிவாஷ், பசுமாட்டு சிறுநீர் மற்றும் இயற்கை எருக்களின் கரைசல் ஆகியவை மண்ணின் உயிரினங்கள் வளர பெரிதும் உதவுகிறது. விதைத்த 25 - 30 நாட்கள் கழித்து, 3-5 முறை இவற்றை தெளித்தல் அதிக விளைச்சலை கொடுக்கும். 
  • இயற்கை முறை வேளாண் மேலாண்மை ஒரு ஒருங்கிணைந்த செயல் முறையாகும். எல்லா அம்சங்களும் ஒன்றிணைக்கப்பட்ட, தனியாக செயல்படும் திறன் வாய்ந்தவை. ஒரு தனிப்பயிர் ஒரு சமயத்தில் வளர்க்கப்படாததால், ஒரு பயிருக்கான சத்து மேலாண்மையினை  கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாகும். சத்து மேலாண்மை முறையின் ஒரு உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தானிய மற்றும் பயறுவகை பயிர்களை ஒன்றாக பயிரிடல்
ஆடி பருவத்தில் சோளம், கம்பு அல்லது மக்காச்சோளம் அல்லது பருத்தி போன்றவற்றை பயறு வகைகளுடன் சேர்த்து பயிரிடலாம். தானிய வகை செடிகள் மொத்த பயிரிடும் இடத்தில் 60 சதவிகித இடத்தையும், பயறு வகை செடிகள் மொத்த பயிரிடும் இடத்தில் 40 சதவிகித இடத்திலும் வரிசையாக பயிர் செய்யப்படவேண்டும். இந்நிலத்தில் 1.5-2 டன் தொழுஉரம், 500 கிலோ மண்புழு உரம், 100 கிலோ ராக் பாஸ்பேட் போன்றவற்றை ஒன்றாக கலந்து அடியுரமாக இடவேண்டும்.  உயிர் உரங்கள் விதை மற்றும் மண் நேர்த்திக்கு பயன்படுத்தலாம். முன்பு பயிர் செய்யப்பட்ட பயிர்களின் கழிவுகளை திரவ உரத்துடன் சேர்த்து மண்ணின் மேற்பரப்பு முழுவதும் விதைப்புக்கு பின் உடனே இடவேண்டும். களைகளை கையால் எடுக்கவேண்டும். களைகளையும் உரமாக பயன்படுத்திடலாம். 200 லிட்டர் திரவ உரத்தினை ஒரு ஏக்கர் என்ற விகிதத்தில் 3-4 முறை நீர் பாய்ச்சும்போது கலந்து உபயோகிக்கலாம் அல்லது ஒரு ஏக்கர் நிலம் முழுவதிலும் சமமாக மழை பெய்யும்போது தெளிக்கவேண்டும். உயிர் டைனமிக் தயாரிப்புகளான மண் சாண குழி அல்லது இ.எம் தயாரிப்புகள் போன்றவற்றையும் தொழு உரத்திற்கு பதிலாக உபயோகிக்கலாம். மண்புழு உர திரவ கழிவு அல்லது மாட்டின் சிறுநீர் போன்றவற்றை அல்லது இவை இரண்டும் 1:1 என்ற விகிதத்தில் கலந்த கலவையினை 2-3 முறை தெளிப்பதால் பயிர் உற்பத்தியினை அதிகரிக்கலாம்.
மார்கழி பட்டத்தில், முதலில் வேகமாக வளரக்கூடிய கீரை வகைகளான பசலைக்கீரை அல்லது பாலக்கீரை போன்றவற்றை பயிரிட்டு பின், தானிய வகை பயிரினை பயிரடலாம். காய்கறிகளையும், பயறு வகைகளுடன் சேர்ந்து பயிர் செய்யலாம். தானிய பயிருக்கேற்றவாரு உரங்களை இந்தப்பருவத்திலும் உபயோகப்படுத்தலாம். காய்கறி பயிர்களுக்கு 500 கிலோ தூளாக்கப்பட்ட எண்ணெய் பிண்ணாக்கு, 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 50 கிலோ ராக் பாஸ்பேட் போன்றவற்றை ஒரு ஏக்கர் நிலத்திற்கு உரமாக உபயோகப்படுத்தலாம்.  மண் நன்றாக உரமேற்றப்பட்டபின், இயற்கை வேளாண்மை முறை பின்பற்ற ஆரம்பித்து 3-4 ஆண்டுகளுக்குப் பின்பு உபயோகிக்கும் உரங்களின் அளவினை 50 சதவிகிதமாக குறைத்துக்கொள்ளலாம்.

vii. விதை நேர்த்தி
இயற்கை முறை மேலாண்மையில், கட்டுப்பாடு முறைகள் அதிக  பிரச்சனைகள் காணப்படும் போது மட்டுமே கையாளவேண்டும். நோயில்லாத விதையினையும், நோய் எதிர்ப்பு ரகங்களையும் உபயோகிப்பது சாலச்சிறந்தது. விதை நேர்த்தி செய்ய ஒரு தரமான முறை தற்பொழுது இல்லை. எனவே விவசாயிகள் பல்வேறு முறைளை உபயோகிக்கலாம். அத்தகைய முதன்மையான விவசாயிகள் கண்டுபிடித்த விதை நேர்த்தி முறைகள் கீழ்வருமாறு.
  • 530 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையுள்ள நீரில் விதைகளை 20-30 நிமிடங்களுக்கு ஊறவைத்தல்
  • மாட்டின் சிறுநீர் அல்லது மாட்டின் சிறுநீர் மற்றும் கரையான் புற்று மண் கலந்த பசையினை விதையுடன் கலத்தல்
  • பீஜாஅம்ருத் கரைசல் - 50 கிராம் மாட்டு சாணம், 50 மிலி மாட்டு சிறுநீர், 10 மிலி பால், 2-3 கிராம் நீர்த்த சுண்ணாம்பு போன்றவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் (பீஜ்ராநட்) கலந்து விதைகளை அதை 12 மணிநேரம் வைத்திருத்தல்
  • 250 கிராம் பெருங்காயத்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 10 கிலோ விதை நேர்த்தி செய்யலாம்.
  • மஞ்சள் தூள், மாட்டு சிறுநீருடன் கலத்தல்
  • பஞ்சகாவிய சாறு
  • டிரைக்கோடெர்மா விரிடி (4 மில்லி கிராம் ஒரு கிலோ விதைக்கு) அல்லது சூடோமோனாஸ் புளோரோஸன்ஸ் (10 கிராம் ஒரு கிலோ விதைக்கு)
  • உயிர் உரங்கள் (ரைசோபியம் அல்லது அசோபாக்டர் +பிஎஸ்பி)

viii. திரவ உரத்தினை தயாரித்தல்
பல விதமான திரவ உரங்கள் பல மாநிலங்களிலுள்ள விவசாயிகளால் தயாரிக்கப்படுகின்றன. சில முக்கியமான பரவலாக உபயோகப்படுத்தப்படும் திரவ உரத்தயாரிப்பு முறைகள் பின்வருமாறு
சஞ்சீவாக்
நூறு கிலோ மாட்டு சாணத்துடன், 100 லிட்டர் மாட்டு சிறுநீர்,  500 கிராம் வெல்லம் போன்றவற்றை  300 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு 500 லிட்டர் மூடப்பட்ட டிரம்மில் ஊற்றிவைக்கவும். இதனை 10 நாட்களுக்கு நொதிக்கவைக்கவும். இதனுடன் 20 மடங்கு தண்ணீர் கலந்து அதனை ஒரு ஏக்கர் மண்ணில் தெளிக்கலாம் அல்லது நிலத்திற்கு பாய்ச்சும் நீரில் கலந்து வயல்களுக்கு பாய்ச்சலாம்.
ஜீவாம்ருதம்
பத்து கிலோ மாட்டு சாணத்துடன் 10 கிலோ மாட்டு சிறுநீர், 2 கிலோ வெல்லம் எதாவது ஒரு தானியத்தின் மாவு 2 கிலோ, உயிர் மண் 1 கிலோ  ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரைக் கலந்து இதனை 5-7 நாட்களுக்கு நொதிக்கவிடவும். இந்த நாட்களில் இக்கரைசலை ஒரு நாளைக்கு 3 முறை கலக்கி விடவும். இதனை ஒரு ஏக்கர் நிலத்திற்கு நீருடன் கலந்து பாய்ச்சலாம்.
பஞ்சகாவ்யா    
சாண எரிவாயு கழிவு 4 கிலோ, புதிய மாட்டு சாணம் 1 கிலோ , மாட்டு சிறுநீர் 3 லிட்டர், மாட்டுபால் 2 லிட்டர், மாட்டு தயிர் 2 லிட்டர், மாட்டு நெய் 1கிலோ ஆகியவற்றை ஒன்றாக கலக்கி 7 நாட்களுக்கு நொதிக்கவைக்கவேண்டும். இந்த ஏழு நாட்களும் ஒரு நாளைக்கு இரண்டு முறை இக்கரைசலை கலக்கி விடவேண்டும். 3 லிட்டர் பஞ்சகாவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் தெளிக்கவும். ஒரு ஏக்கர் மண்ணில் தெளிப்பதற்கு அல்லது நீருடன் பாய்ச்சுவதற்கு 20 லிட்டர்  பஞ்சகாவ்யா தேவை.
ஊட்டமேற்றிய பஞ்சகாவ்யா
ஒரு கிலோ புதிய மாட்டு சாணத்துடன், மாட்டு சிறுநீர் 3 லிட்டர், மாட்டுப்பால் 2 லிட்டரும், தயிர் 2 லிட்டரும், நெய் ஒரு கிலோவும், கரும்புச்சாறு 3 லிட்டர், தேங்காய் தண்ணீர் 3 லிட்டர், மசித்த வாழைப்பழம் 12 கலந்த கலவையினை 7 நாட்களுக்கு நொதிக்க விடவும். மேற்கூறிய பஞ்சகாவ்யா கரைசலை நிலத்திற்கு பாய்ச்சுவது போலவே இதனையும் உபயோகிக்கவும்.

ix. பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் மேலாண்மை
இயற்கை வேளாண் பண்ணை மேலாண்மையில் வேதியியல் பொருட்கள் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை கீழ்க்கண்ட முறைகளில் கட்டுப்படுத்தலாம்.
  1. உழவியல் முறை
  2. இயந்திரவியல் முறை
  3. உயிரியல் முறை
  4. இயற்கை முறையில் ஒத்துக்கொள்ளப்பட்ட வேதியியல் மாற்றுப்பொருட்களை உபயோகிப்பது
  • உழவியல் முறை
நோயற்ற விதைகளை உபயோகித்தல் அல்லது நோய் எதிர்ப்புத்திறன் வாய்ந்த பயிரினங்களை உபயோகிப்பது, இயற்கை வேளாண் முறையில் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தும் மேலாண்மை முறையாகும். பண்ணையில் பல்வேறு உயிரினத்தன்மையினை பராமரித்தல், முறையான பயிற்சுழற்சி முறை, பல்வேறு பயிர்களை பயிரிடுதல், வாழ்விடங்களை மாற்றியமைத்தல், பூச்சிகளை பிடிக்கும் பொறிப் பயிர்களை உபயோகித்தல் போன்ற முறைகளை பின்பற்றுவதன் மூலம் பூச்சிகளால் ஏற்படும் பொருளாதார இழப்பினை கட்டுக்குள் வைக்கலாம்
  • இயந்திரவியல் மாற்றுமுறை
பாதிக்கப்பட்ட செடிகள் அல்லது தாவரங்களையும் அவற்றின் பாகங்களை பண்ணையிலிருந்து அகற்றுதல், பூச்சிகளின் முட்டைகளையும் மற்றும் புழுக்களையும் சேகரித்து அழித்தல், விளக்குப் பொறிகளை உபயோகித்தல், ஒட்டும் வண்ண தட்டுகளை உபயோகித்தல் மற்றும் இனக்கவற்ச்சி பொறிகளை உபயோகித்தல் போன்றவை பூச்சிகளை கட்டுப்படுத்த நன்கு செயல்படும் இயந்திரவியல் மாற்று முறைகளாகும்.


  • உயிரியில் மாற்றுமுறைகள்
பூச்சிகளை பிடிக்கும் விலங்குகளையும், நுண்கிருமிகளையும் உபயோகிப்பதன் மூலம் பயிர்களை பூச்சித்தாக்குதலிருந்து காத்து பூச்சிகளை பொருளாதார இழப்பு ஏற்படுத்தாமல் கட்டுப்படுத்துகிறது. டிரைக்கோகிரம்மா முட்டைகள் 40000-50000/ஒரு ஹெக்டேர் நிலத்தில் மெதுவாக வெளியிடுதல், கிலோநஸ் பிளாக்பர்னி   15000-20000 /ஒரு ஹெக்டேர், அபான்டெலஸ் 15000-20000 /ஒரு ஹெக்டேர், கிரைசோபர்லா 5000 /ஒரு ஹெக்டேர் போன்றவற்றை மெதுவாக நிலத்தில் விதை விதைத்து 15 நாட்கள் கழித்து வெளியிடுமாறு செய்து விட்டு,  பின்பு விதை விதைத்து 30 நாட்கள் கழித்து மற்ற ஒட்டுண்ணிகளையும், வெளியிடுதல் மூலம் இயற்கை வேளாண்மை பண்ணையில் பூச்சிகளின் தாக்கத்தினை எளிதில் கட்டுப்படுத்திடலாம்
  • உயிர்பூச்சிக்கொல்லிகளை உபயோகித்தல்
டிரைக்கோடெர்மா விரிடி அல்லது டி.ஹாராஷியானம் அல்லது சூடோமோனாஸ் புளூரெசன்ஸ் போன்றவற்றை தனியாகவோ அல்லது இவற்றை கலந்தோ 4 மில்லி கிராமினை ஒரு கிலோ விதையில் கலந்து உபயோகிப்பதன் மூலம் விதையின் மூலமும், மண்ணின் மூலமும் பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம். இது தவிர பிவேரியா பேசியானா, மெட்டாரைசியம் அனிசோபைலே, நியுமெரியா ரைலேயி, வெர்ட்டிசிலியம் போன்ற சந்தையில் கிடைக்கும் இதர உயிர் பூச்சிக்கொல்லிகளையும் உபயோகித்து ஒரு குறிப்பிட்ட பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும். பேசில்லஸ் துரின்ஜென்ஸ், ஸ்டீனீபிரியோனிஸ் மற்றும் பே. துரின்ஜென்ஸ் சாண்டிகோ போன்றவை வண்டு வகை பூச்சியினை நன்கு கட்டுப்படுத்தவும் மற்றும் இதர சில பூச்சிகளை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. பி.டி. எனப்படும் மேற்கூறிய பூஞ்சை டயமன்ட் கருப்பு மோத் எனப்படும் காய்கறிகளை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 0.5-1 கிலோ என்ற அளவில் உபயோகிக்கலாம்.

  • தாவர பூச்சிக்கொல்லிகள்  
நிறைய தாவரங்களுக்கு பூச்சிக்கொல்லி பண்புகள் உள்ளன. இத்தாவரங்களின் சாறுகள் மற்றும் இதர பண்படுத்தப்பட்ட பாகங்கள் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்திட உதவுகின்றன. இவ்வாறு உபயோகப்படும் தாவரங்களில் வேம்பு நன்கு செயல்படுகிறது.
வேம்பு   
தோராயமாக வேம்பு 200 வகையான பூச்சிகள், வண்டுகள் மற்றும் புழுக்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வெட்டுக்கிளிகள், இலையினை உண்ணும் பூச்சிகள், செடிப்பூச்சிகள், அசுவனி, பச்சை தத்துப்பூச்சி,  புழுக்கள் மற்றும் அந்து பூச்சி போன்றவற்றை நன்கு கட்டுப்படுத்த வேம்பு உதவுகிறது. வேம்பின் பாகங்களிலிருந்து எடுக்கப்படும் சாறுகள் வண்டுகளின் புழுக்கள், பட்டாம்பூச்சி மற்றும் இதர புழுக்கள் கட்டுப்படுத்த உதவும். இலை சுருட்டுப்புழு, தத்து பூச்சிகள், இலைப்புழு,  போன்றவற்றை நன்கு கட்டுப்படுத்த உதவுகின்றது. வண்டுகள், அபிட்ஸ், வெள்ளை பூச்சிகள், மாவுப்பூச்சி, வளர்ந்த பூச்சிகள், பழ வண்டுகள், சிலந்தி மைட்கள் போன்றவற்றையும் கட்டுப்படுத்த பயன்படுகிறது.
இதர பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்
பெரும்பாலான இயற்கை விவசாயிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிறைய புதுமையாக பூச்சித்தாக்குதலை பயிர்களில் கட்டுப்படுத்தும் முறைகளை கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த முறைகளில் அறிவியல் பூர்வமாக பரிசோதித்து பார்க்கப்படவில்லை எனினும் அவை பெரும்பாலான விவசாயிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவற்றின் உபயோகத்தினை பற்றி விவசாயிகளின் பேசுவதை கேட்க முடிகிறது. விவசாயிகள் இக்கண்டுபிடிப்புகளை வெளியில் பொருட்களை வாங்காமல் அவர்கள் பண்ணையில் தயாரித்து உபயோகிக்க முயற்சிக்கலாம். பிரபலமடைந்த தயாரிப்பு முறைகளை கீழே காணலாம்.

மாட்டு சிறுநீர்
மாட்டு சிறுநீரினை தண்ணீரில் 1:20 என்ற விகிதத்தில் கலந்து இதனை பயிர்களில் தெளிப்பதன் மூலம் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளையும் பூச்சிகளையும் கட்டுப்படுத்துவதோடு மட்டுமன்றி பயிர்களின் வளர்ச்சி ஊக்கியாகவும் இது செயல்படுகிறது.
நொதிக்கவைக்கப்பட்ட தயிர்
மத்திய இந்தியாவின் சில பாகங்களில் மோர் (நொதிக்கவைக்கப்பட்ட தயிரினை0 வெள்ளை ஈ, தத்து பூச்சி மற்றும் அசுவினி போன்றவற்றை கட்டுப்படுத்த உபயோகிக்கப்படுகிறது
தஸ்பர்ணி சாறு
அரைக்கப்பட்ட வேப்பிலை 5 கிலோ, நொச்சி இலைகள் 2 கிலோ, ஆடுதிண்ணா பாலை இலைகள் 2 கிலோ, பப்பாளி 2 கிலோ, டினோஸ்போரா கார்டிபோலியா இலைகள் 2 கிலோ சீதாப்பழ மரம்  இலைகள் 2 கிலோ, புங்க இலைகள் 2 கிலோ, ஆமணக்கு இலைகள் 2 கிலோ, அரளி 2 கிலோ, எருக்கு இலைகள் 2 கிலோ, பச்சை மிளகாய் அரைத்தது 2 கிலோ, பூண்டு நசுக்கியது 250 கிராம், மாட்டு சாணம் 3 கிலோ மற்றும் மாட்டு சிறுநீர் 5 லிட்டர் போன்றவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மாதத்திற்கு நொதிக்கவைக்கவேண்டும். இக்கலவையினை தினமும் மூன்று முறை ஒழுங்காக கலக்கிவிடவும். நன்கு நசுக்கி பின்பு சாறு எடுக்கவும். இதனை ஆறு மாதத்திற்கு சேமித்து வைக்கலாம். இச்சாறு ஒரு ஏக்கருக்கு பாய்ச்சுவதற்கு போதுமானது.
நீம்அஸ்ட்டிரா
வேப்பிலை தண்ணீருடன் கலந்து அரைத்தது 5 கிலோ,  இதனுடன் 5 லிட்டர் மாட்டு சிறுநீர், 2 கிலோ மாட்டு சாணம் போன்றவற்றை கலந்து 24 மணி நேரத்திற்கு நொதிக்கவிடவும். இந்த நொதித்தலின் போது இடையிடையில் கலக்கிவிடவும். பின்பு நன்கு பிழிந்து வடிகட்டி தண்ணீருடன் கலந்து 100 லிட்டராக தயாரிக்கவும். இதனை ஒரு ஏக்கர் நிலத்திற்கு தெளிக்க உபயோகிக்கலாம். உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் மாவுப்பூச்சிகளின் தாக்குதலையும் கட்டுப்படுத்த இந்த கரைசல் உதவுகிறது.
பிரம்மாஸ்டிரா
மூன்று கிலோ அரைத்த வேப்பிலையுடன் 10 லிட்டர் மாட்டு சிறுநீர் கலக்கவும். பின் 2 கிலோ அரைத்த சீதாப்பழ மர இலைகள், 2 கிலோ பப்பாளி மர இலைகள், 2 கிலோ மாதுளை இலைகள், 2 கிலோ கொய்யா மர இலைகள், போன்றவற்றை தண்ணீருடன் கலக்கவும். மேற்கூறிய இரண்டையும் கலக்கி 5 முறை இக்கரைசல் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவும். பின்பு 24 நேரம் கழித்து வடிகட்டவும். இதனை பாட்டில்களில் 6 மாதம் வரை சேமித்துவைக்கலாம். 2-2.5 லிட்டர் கரைசலை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கர் நிலத்திற்கு உபயோகிக்கலாம். இது உறிஞ்சும் பூச்சிகள், பழ ஒட்டைபோடும் பூச்சிகள் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் உபயோகிக்கலாம்.
அக்னியாஸ்டிரா
ஒரு கிலோ அரைக்கப்பட்ட நெய்வேலி காட்டாமணி இலைகள், 500 கிராம் மிளகாய்,  500 கிராம் பூண்டு, 5 கிலோ வேப்பிலை போன்றவற்றை 10 லிட்டர் மாட்டு சிறுநீரில் கலக்கவும். இதனை 5 முறை அதன் அளவில் பாதியாகும் வரை  கொதிக்கவைக்கவும்.  பின்பு இக்கரைசலை வடிகட்டி கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் சேமித்து வைக்கலாம். 2-3 லிட்டர் கரைசலை தண்ணீருடன் கலந்து 100 லிட்டராக்கி ஒரு ஏக்கருக்கு உபயோகிக்கலாம். இது இலை சுருட்டுப்புழு, தண்டு, பழ ஒட்டை போடும் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது